‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில் ‘செவப்பி”
'பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'செவப்பி- ஆஹா ஒரிஜினல்' ஜனவரி 12, 2024 அன்று ப்ரீமியர் ஆகிறது!நம்பிக்கைக்குரிய மற்றும் பாராட்டுக்குரிய படங்களை தயாரித்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது ஆஹா தமிழ். அந்த வரிசையில், இப்போது அவர்கள் 'செவப்பி' என்ற படத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர தயாராக உள்ளனர். ராஜேஷ்வர் காளிசாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரித்திருக்க, எம். எஸ். ராஜா இந்த ஃபீல் குட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். குமரன் என்ற 5 வயது சிறுவனுடைய கதாபாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கும் 'பிக் பாஸ்' புகழ் பூர்ணிமா ரவியின் கதாபாத்திரமும் முதன்மையானது. பிரபல தமிழ் கலைஞரான ரிஷிகாந்த் சிறுவனின் தாய் மாமாவாக நடித்துள்ளார்.1990 களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனை சுற்றி நடக்கும்...