ஹரிதாஸ் (1944)
(முக்கிய நடிகர்கள்: எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், என்.சி.வசந்த கோகிலம், புளிமூட்டை ராமசாமி)‘ஹரிதாஸ்’ திரைப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் ஒரு தனிப் பெருமையும், நீங்காத புகழும் உண்டு.
இப்படத்தின் கதை ‘பக்த விஜயம்’ என்கிற நூலை ஆதாரமாகக் கொண்டது. 16-10-1944 இல் வெளிவந்த இத்திரைப்படம் சென்னை பிராட்வே தியேட்டரில் அந்த வருட தீபாவளி உட்பட 3 தீபாவளிகளைக் கொண்டாடி, 110 வாரங்கள் ஓடி ஒரு மாபெரும் சரித்திரம் படைத்தது.
ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் தயாரிப்பான ‘ஹரிதாஸ்’ இரண்டாவது உலகப்போர் மும்மரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்ததால், அப்போதைய அரசுக் கட்டுப்பாட்டின் காரணமாக நீளம் குறைந்த படமாகத் தயாரிக்கப்பட்டது. மொத்த நீளம் 10995 அடிகள் தாம். இது அக்கால நடைமுறைப்படி மிகச் சிறிய படம்.
இந்த ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்ட...