கடத்தப்படும் பஸ் 657.!
பிரயாணிகளை ஏற்றிச் செல்கின்ற பேருந்தை ஓட்டும் ட்ரைவர் பணயக்கைதியாக வைக்கப்பட்டு, பேருந்தைக் கடத்தினால் என்ன நடக்கும் என்பதை ஸ்பீட் (Speed) மற்றும் ஸ்பீட் – 2 (Speed - 2) படங்களில் கண்டுள்ளோம். அதே போல், ஒரு மனிதன் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக ஒரு பேருந்தைக் கடத்த நேரிட்டால், என்ன மாதிரியான விளைவுகள் உருவாகும் என்பதுதான் பஸ் 657 படத்தின் சாரம்.
மிகச் சிறந்த கிளாஸிக் மற்றும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள ராபர்ட் டி நீரோ, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். தி டார்னமென்ட் (The Tournament) என்கிற ஒரு மகத்தான ஆக்ஷன் படத்தை அளித்த ஸ்காட் மான், இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்டீஃபன் சைரஸ் செஃபர் மற்றும் மேக்ஸ் ஆடம்ஸ், இதற்கு திரைக்கதை அமைத்துள்ளனர்.
மனைவியை இழந்த சூழலில், தனது ஒரே மகளை வளர்த்திட அரும்பாடு படுகிறார் லூக் வான். நோய்வாய்பட்டுவிட்ட தனது மகளின் சிகிச்சைக்காக அதிக பணம் தேவைப்படுகிறது லூக்கி...