லால் சலாம் விமர்சனம்
தங்கள் அரசியல் லாபத்திற்காக ஒரே ஊரில் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்து இஸ்லாமிய மக்களிடையே பிரச்சனையைத் தூண்டிவிடப் பார்க்கும் அரசியல்வாதிகள். இது தெரியாமல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எழும் போட்டியில் அடித்துக் கொள்ளும் இந்து, இஸ்லாம் விளையாட்டு வீரர்கள், இதற்கு மத்தியில் ஊரில் தடைபட்டுப் போன கோவில் திருவிழா, முறைத்துக் கொண்டு திரியும் இரு வேறு சமயத்தைச் சேர்ந்த நாயகர்களின் அப்பாக்கள் இருவரும் உயிர் தோழர்கள் இப்படியிருக்கும் ஒவ்வொரு ஒன்லைன் –களுக்கும் சினிமாத்தனமான முடிவுகள் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு எழுதத் தெரியும் என்றால் அதுதான் ஒட்டு மொத்த லால் சலாம் திரைப்படம்.தன் தந்தை மீது சங்கி என்னும் முத்திரை விழுவதை அவமானமாகக் கருதும் மகள் கிடைப்பது ஒரு கொடுப்பினை தான். அந்த முத்திரை அவமானகரமானது, என் தந்தை அப்படி இல்லை என்று சொல்லத் துடித்து இப்படி ஒரு திரைப்படத்தை மகள் ஐஸ்வர...