Shadow

Tag: டொயமா

ஜம்புலிங்கம் 3D – குழந்தைகள் சினிமா

ஜம்புலிங்கம் 3D – குழந்தைகள் சினிமா

சினிமா, திரைச் செய்தி
“குழந்தைகளுக்கான சினிமா என்பது தமிழில் அருகிவிட்டது அல்லது இல்லவே இல்லைன்னு சொல்லலாம். அந்த வகையில், ஜம்புலிங்கம் 3D எனும் படத்தை நான் ‘தமிழ் ஹாரி பாட்டார்’ எனச் சொல்வேன். மிகச் சுவாரசியமான படம்” எனப் புகழ்ந்தார் Y.G.மகேந்திரன். இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு, எஸ்.வி.சேகர் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் வாழ் தமிழரான ஹரி இப்படத்தைத் தயாரித்துள்ளார். நாடகம், இசை என தமிழ்க்கலை சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் பொறுப்பேற்பெடுத்து ஜப்பானில் அரங்கேற உதவி செய்து வருபவர். அதனால்தான் நாடகக் கலைஞர்களான க்ரேசி மோகன், எஸ்.வி.சேகர், Y.G.மகேந்திரன் போன்றோர்களும், இசைக் கலைஞர்களான கங்கை அமரன் முதலியவர்களும் ஹரியின் நட்பிற்காகவும் நற்குணத்துக்காகவும் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து சிறப்பித்தனர். விழாவிற்கு வந்திருந்த ஜப்பானியர் ஒருவரின் அழகு தமிழ் கொஞ்சும் உரை மனதிற்கும் காதிற்கும் இனிமை...