Shadow

Tag: டோவினோ தாமஸ்

ARM விமர்சனம்

ARM விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ARM: Ajayante Randam Moshanam – அஜயனின் இரண்டாம் திருட்டு நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த மூவரின் கதை. களரி வீரனான கேலு, வீரனின் மகனான திருடன் மணியன், திருடனின் பேரனான அஜயன் என படத்தில் மூன்று நாயகன்கள், மூன்று குணாதிசயங்கள், மூன்று காதல்கள், மூன்று கதைகள் உள்ளன. காலத்தை வாகனமாகக் கொண்ட ஓர் அருவ பிரபஞ்ச பயணியின் குரலில் படம் தொடங்குகிறது. விண்கல்லால் செய்யப்பட்ட விளக்கைத் தனது வீரத்தின் பரிசாகக் கொண்டு வருகிறார் கேலு. காதலுக்காகவும், துரோகத்திற்குப் பழிவாங்கும்விதமாக அவ்விளக்கைக் கவருகிறார் மணியன். சாதிய அடுக்குமுறையில் இருந்தும், திருடனின் ரத்தம் என்ற ஏளனத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள, அவ்விளக்கை மீட்கிறார் அஜயன். கேலுவான டோவினோ தாமஸ்க்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்க்குமான காதல் எட்டாக்கனியாக உள்ளது. ஊராரிடம் பெரும் பெயரைச் சம்பாதித்தாலும், இவரது வாழ்க்கை ஒரு துயர காவியம். திருடன் மண...