Shadow

Tag: தனஞ்ஜெயன்

ஒரு நொடி”-யை பார்க்க தூண்டும் 3 முக்கிய அம்சங்கள்

ஒரு நொடி”-யை பார்க்க தூண்டும் 3 முக்கிய அம்சங்கள்

சினிமா, திரைச் செய்தி
ஒன்று. தமிழ் திரை வரலாற்றில் முதன் முறையாக ஒரு படத்தையே 13 நிமிட குறும்படமாக காட்டிய அந்த முயற்சி, பலனளித்திருக்கிறது. அந்த பதிமூன்று நிமிடக் காட்சியின் ஒவ்வொரு நொடியும் படம் தொடர்பான சுவாரஸ்யத்தைக் கூட்டுவதோடு, மெய்யாகவே நம்மை இருக்கை நுனிக்கு தள்ளுகின்றன.இரண்டு. த்ரிஷ்யம் திரைப்படத்திற்குப் பிறகு, இப்படத்தின் முடிவு தான் எங்களால் கணிக்க முடியாததாக இருந்தது என்கின்ற தணிக்கை துறையினரின் பாராட்டு.மூன்று. படத்தைப் பார்த்த மறுகணமே, தான் முன் வைக்கும் யோசனைகளைப் பரிசீலிப்பதாக இருந்தால் படத்தினை நல்ல விலைக்கு வாங்கி நானே வெளியிடுகிறேன் என்று முன்வந்த தனஞ்ஜெயன் சார்,. அவருக்கு படத்தின் மீதிருக்கும் நம்பிக்கை, இப்படம் மீதான நம் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.”ஒரு நொடி” முடிவு காண சில மணி காத்திருப்போம். ...
“பாரதிராஜா அருகில் உட்காரத் தகுதியானவர் வெற்றிமாறன்” – இயக்குநர் லிங்குசாமி

“பாரதிராஜா அருகில் உட்காரத் தகுதியானவர் வெற்றிமாறன்” – இயக்குநர் லிங்குசாமி

சினிமா, திரைச் செய்தி
ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடலாசிரியர் சிநேகன், “ஜிவி சாருடன் சேர்ந்து நிறைய படங்களில் பயணப்பட்டிருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்குப் பாடல் எழுதும்போது வரிகளை ரசிக்கும் இசையமைப்பாளர் இருந்தால் எழுதுவதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். அப்படியான ஒருவர்தான் ஜிவி. இந்தப் படத்தின் பாடல்களும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இயக்குநர் ஷங்கர் அவ்வளவு ஒற்றுமையுடன் அணியை எடுத்துச் சென்றார். ஜிவி பிரகாஷ் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வார்” என்றார். இசையமைப்பாளர் ரேவா, “ 'கள்வன்' படம் எங்கள் எல்லோருக்குமே ஸ்பெஷல் படம். என்னை நம்பி இசையமைக்க வா...