Shadow

Tag: தனபாலன் கோவிந்தராஜ்

பருந்தாகுது ஊர்குருவி – சர்வைவல் த்ரில்லர்

பருந்தாகுது ஊர்குருவி – சர்வைவல் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் த்ரில்லராக உருவாகி இருக்கும் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணா, “இந்தப் படத்தை நான், சுரேஷ் மற்றும் வெங்கி சந்திரசேகர் மூவரும் இணைந்து தயாரித்துள்ளோம். இங்கு வந்துள்ள திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் அய்யாவிற்கு முதலில் நன்றி. வெற்றி பெற்ற இளம் இயக்குநர்களை வைத்து இந்த விழாவை துவங்க நினைத்து எல்லோரையும் அழைத்தோம். பல நாட்கள் இந்த மேடைக்காக ஏங்கியுள்ளேன். இப்போது அது நிறைவேறியுள்ளது. படக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். இந்த படம் மார்ச் 24 ஆம் தேதி வெளியாகிறது” என்றார். நாயகி காயத்ரி, “எனக்கு இப்படத்தில் வாய்ப்பளித்த இ...