Shadow

Tag: தனி ஒருவன்

தனி ஒருவன் 2 – மித்ரனின் அடுத்த குறி தயார்!

தனி ஒருவன் 2 – மித்ரனின் அடுத்த குறி தயார்!

சினிமா, திரைத் துளி
"தனி ஒருவன்" இன்று 3 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக ஊடகங்களில் ஹாஷ் டேக் ட்ரெண்டிங்குடன் ரசிகர்கள் விமரிசையாகத் தனி ஒருவனைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இயக்குநர் மோகன்ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும், ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறார்கள். 'தனி ஒருவன் 2' படத்தை விரைவில் தொடங்கவுள்ளனர். இந்த உற்சாகமான தருணத்தைப் பற்றி இயக்குநர் மோகன் ராஜா கூறும்போது, "தனி ஒருவன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பும், அதற்கு கொடுத்த மிகப்பெரிய வெற்றியும் அலாதியானது. அவர்களின் எதிர்பார்ப்புக்கும் அதிகமான ஒரு விஷயத்தை இந்தத் 'தனி ஒருவன் 2' மூலம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறேன். நாங்கள் ஏற்கனவே முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்களுடன் பேசி வருகிறோம்...
திரிசங்கு சொர்க்கத்திலிருந்து மீண்ட ராஜா

திரிசங்கு சொர்க்கத்திலிருந்து மீண்ட ராஜா

சினிமா, திரைத் துளி
“12 வருடம் திரிசங்கு சொர்க்கத்தில் இருந்தேன். ரீமேக் படம் மட்டுமே எடுக்கிறேன் எனச் சொன்னாங்க. நான் நிஜமாவே படம் எடுக்கிறேனா? நான் இயகுநர்தானா என்றெல்லாம் சந்தேகமாக இருந்தது” என்று மிகவும் கலங்கிப் போயிருந்ததாகச் சொன்னார் மோகன் ராஜா. “எங்கண்ணனோட திறமை என்னென்னு எங்க குடும்பத்தினருக்கே மட்டுமே தெரிந்த விஷயம் இப்ப அனைவருக்கும் தெரிந்திருக்கு. இந்த வெற்றி எனக்கு ஆச்சரியம் தரலை. அதற்காக அவர் எப்படிலாம் உழைச்சாருன்னு எனக்கு மட்டுந்தான் தெரியும். இந்தக் கதை காம்ப்ளக்ஸ்ன்னா மைன்ட் கேம். நான், எங்கண்ணன் என்பதால் ஒத்துக்கிட்டேன். ஆனா கணேஷ் வெங்கட்ராம், ராகுல், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண் எல்லாம் எங்கண்ணனை நம்பி வந்தாங்க. இப்ப எங்க குடும்பத்தில் ஒருத்தராகிட்டாங்க. தம்பி ராமையா சார் கலக்கிட்டார். அவர் நடிச்ச கேரக்டருக்கு ரெஃபரன்ஸே கிடையாது. ஆனா ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிட்டார். சுரேஷ் சார், பாலா சார் ...
சகோதரர்களின் ஜெயம்

சகோதரர்களின் ஜெயம்

சினிமா, திரைத் துளி
தனி ஒருவன் ஈட்டிய வெற்றியில், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர் ஜெயம் சகோதரர்கள். தனி ஒருவனின் வெற்றிக்கு முன்பே, ஜெயம் ராஜா தன் பெயரை மோகன் ராஜா என மாற்றிக் கொண்டார். இப்போது, தனி ஒருவனின் வெற்றிக்குப் பின்பு, ஜெயம் ரவியும் தன் பெயரை ‘தனி ஒருவன் ரவி’ என மாற்றிக் கொள்வாரா என்ற கேள்விக்கு, “ஜெயம் என்பது என் விசிட்டிங் கார்ட். எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கடைசி வரை நான் ஜெயம் ரவிதான். ஆனால் தனி ஒருவனுக்கு என் நெஞ்சில் இடம் கொடுத்துள்ளேன். தனி ஒருவன் - என் நெஞ்சில் பச்சை குத்தப்பட்ட முத்திரை போன்றது” என்றார் ஜெயம் ரவி. “மோகன் ராஜா என நான் பெயர் மாத்தியதற்கு நிறைய பேர் திட்டினாங்க. ஜெயம் ராஜா என்ற ப்ராண்ட் நேமை எப்படி நீங்க மாத்தலாம்னு கேட்டாங்க. எனக்குள்ள சினிமாவைத் திணிச்சது என் அப்பா. அவருக்கான ட்ரிப்யூட்தான் இந்தப் படம். இந்தப் படத்தில் அவர் பெயர் வ்ர்ணும்னு நினைச்சேன். ...
தனி ஒருவன் விமர்சனம்

தனி ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நல்லவனும் ஒரு கெட்டவனும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் தனி ஒருவன் படத்தின் கதை. ஐ.பி.எஸ். அதிகாரி மித்ரனாக ஜெயம் ரவி. குற்றங்களைக் கண்டு பொங்கிடும் நல்லவர்; கல்வி கேள்விகளில் வல்லவர்; 24 மணி நேரமும் குற்றங்களைத் தேடியும், அதைப் பற்றியுமே யோசிப்பவர். அதைத் தடுப்பதற்காகவே ஐ.பி.எஸ்.சில் சேருகிறார். மிகச் சிறிய வயதிலேயே குற்றங்களையும், அந்தக் குற்றத்துக்கான காரணங்களையும் செய்தித் தாள்களிலேயே கண்டடையும் தனித் திறமை மிக்கவராகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறார். நாளடைவில் செய்தித் தாளில் வரும் செய்திகளுக்குப் பின்னால் வேறு உண்மை இருக்கக்கூடும் என்ற புரிதலும், ஒவ்வொரு பெரிய குற்றத்துக்கும் முன் ஒரு சிறு குற்றமிருக்கும் என்ற உண்மையும் அவருக்குப் புரிய வருகிறது. ஆக, 100 குற்றவாளிகளை உருவாக்கும் ஒரே ஒரு பெரிய குற்றவாளியைப் பிடிப்பதுதான் அவர் வாழ்வின் ஒரே லட்சியம். சிந்தாமல் சிதறாமல், சிறு சந்தர்ப்பத...