Shadow

Tag: தனுஷா

கோகோ மாக்கோ விமர்சனம்

கோகோ மாக்கோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
96 நிமிடப் படம். தயாரிப்பாளரான அருண்காந்த் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதிப் பாடி இயக்கியதோடு இசையமைத்து, ஒலி வடிவமைப்பு, டப்பிங் இன்ஜினியரிங் செய்து, உடை வடிவமைத்து, கிராஃபிக் டிசைன், கோரியோகிராஃபி என 15 பிரிவில் பங்காற்றி நடித்துமுள்ளார். அருண்காந்திற்கு தனது இசை ஆல்பத்தை வீடியோ ஆல்பமாக மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ராம்குமாரும் தனுஷாவும் வேலன்டைன்ஸ் டே-க்கு ரோட் ட்ரிப் போக, ப்ளூட்டோவை அனுப்பி தனுஷாக்குத் தெரியாமல் வீடியோ ஆல்பத்திற்காகப் படம்பிடிக்கச் சொல்கின்றார் அருண்காந்த். ரோட் ட்ரிப் என்னானது, மியூசிக்கல் வீடியோ ஆல்பம் என்னானது என்பதுதான் படத்தின் கதை. மொத்தப் படப்பிடிப்பையும் 12 நாளில், GoPro கேமிராவில் படம்பிடித்து அசத்தியுள்ளனர். வசனங்களை முன்னரே எழுதாமல், காட்சி நடக்கும் இடத்திற்குச் சென்று, கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு வசனம் எழுதியுள்ளார் அருண்காந்த். அந்த அமெச்சூர்...