கபாலி விமர்சனம்
வழக்கமான ரஜினி படம் போல் தொடங்கினாலும், சிறையில் இருந்து வரும் ரஜினி தன் வீட்டுக்குப் போனதும் படம் வேறு பரிமாணத்தைப் பெறுகிறது. முற்றிலும் புது அனுபவத்தைத் தருகிறது. வீட்டின் ஒவ்வொரு மூலையும், அவருக்குத் தன் மனைவியின் ஞாபகத்தை மீட்டெழச் செய்கிறது. அதைத் தாங்கொண்ணாத ரஜினி, தன் பலஹீனத்தை மறைத்தவாறு, டேபிளில் தாளம் போட்டுக் கொண்டே அமீரிடம் தனியாக இருக்கப் பிரியப்படுவதாகச் சொல்கிறார். விடலைத்தனத்துக்கு ஒத்த காதலையே காவியம் போல் வியந்தோதி தமிழ் சினிமா மகிழ்ச்சி அடைந்து கொள்ளும் (ரஜினியின் ‘சிவாஜி’ படம் ஓர் எடுத்துக்காட்டு!) அதுவும் கல்யாணத்துக்கு முன்பான கவர்ச்சியோடு தன்னைச் சுருக்கிக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. ஆனால், நரை கண்ட கபாலிக்கு எப்பொழுதும் தன் மனைவியின் ஞாபகம்தான். ‘தன் மனைவி உயிரோடு இருக்கிறாளா இல்லையா?’ என்பதே தெரியாமல், கபாலியாக ரஜினி காட்டும் சங்கடமும் வேதனையும் மிக அற்புதம். ர...