
லிஃப்ட் விமர்சனம்
விஜய் டிவியின் 'பிக் பாஸ்' புகழ் கவின் நாயகனாக நடித்துள்ள 'லிஃப்ட்' திரைப்படத்தினை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
அலுவலகத்தில் தனது முதல் நாள் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும் குரு பிரசாத், லிஃப்டில் மாட்டிக் கொள்கிறான். அமானுஷ்ய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகித் தப்பிக்க வழியின்றித் திணறிக் கொண்டிருக்கும் குரு பிரசாத்துடன், மனிதவள மேலாளரான ஹரினியும் சேர்ந்து சிக்கிக் கொள்கிறாள். இருவரையும் பாடாய்ப்படுத்தும் அமானுஷ்ய சக்தி எது, அதிலிருந்து எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
ஒரு லிஃப்ட்க்குள் நடக்கும் கதையைப் பார்ப்பவர்கள் சலிப்படையாதவாறு மிகச் சிறப்பான பணியினைப் புரிந்துள்ளார் ஒளிப்பதிவாளர் யுவா. கவினின் வெளிறிய முகம், லிஃப்ட், லிஃப்ட் பட்டனைக் கொண்டே படத்தொகுப்பாளர் G.மதன், காட்சிகளை விறுவிறுப்பாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளர...