Shadow

Tag: தமிழ்ப்படம்

தமிழ்படம் விமர்சனம்

தமிழ்படம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"தமிழ்படம்" - பொதுப்பெயரையும், தனிப்பெயரையும் ஒருங்கே பெற்றுள்ள முழுநீள நகைச்சுவைப் படம். சினிமா பட்டி என்னும் ஊரில் ஆண் குழந்தைகளைக் கள்ளிப் பால் கொடுத்துக் கொல்கின்றனர். அங்கு ஓர் ஆண் குழந்தை, நாயகன் ஆகும் ஆசையோடு பிறந்து சென்னை வருகிறது. அந்தக் குழந்தை தனது லட்சியத்தில் வென்றதா என்பது தான் படத்தின் முடிவு. சிவா. சென்னை 600028 மற்றும் சரோஜாவைத் தொடர்ந்து நாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ள படம். முந்தையப் படங்கள் போல் அல்லாமல் தனி நாயகனாக இப்படத்தில் கலக்கியுள்ளார். கேலி செய்த பின் பொதுவாக அனைவருக்கும் எழும் மென்னகையை எப்பொழுதும்  முகத்தில் அணிந்தவாறே படம் முழுவதும் வருகிறார். கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தியதோடு மட்டுமல்லாமல் படத்தின் தன்மையை முழுவதுமாக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார். திஷா பாண்டே அறிமுக கதாநாயகியாக. திரைக்கதையில் அடித்து வரப்படும் சிறு மீன். அவ்வளவே!! பரிச்சயமற்ற...