Shadow

Tag: தமிழ் ப்ரியா

கதவு தட்டப்பட்டது..!

கதவு தட்டப்பட்டது..!

நம்பினால் நம்புங்கள்
லில்லி ஆன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 'டொக்... டொக்...' கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தாள். பெட்ரூம் லைட்டைப் போட்டாள். இரவு மணி 11:55. இரவு பணிக்குப் போன தன் கணவன் நிக்சன், ஏதாவது காரணமாக வீடு திரும்பி விட்டானா என்ற சிந்தனையுடன் நைட் கவுனைச் சரி செய்துகொண்டு பெட்ரூமை விட்டு ஹாலுக்கு வந்தாள். 'நிக்சன்' - என்று குரல் கொடுத்தாள். பதில் இல்லை. இரண்டு வினாடி நிசப்தம். பிறகு மீண்டும், 'டொக்... டொக்...' 'யாரது?' - உரக்கக் கேட்டாள். இப்போதும் பதில் இல்லை. சிறிது நேர அமைதிக்குப் பின், அதே சீரான இடைவெளியில், இரண்டு முறை மீண்டும் கதவு தட்டப்பட்டது. அந்த ஏரியாவில் இரவு நேரங்களில் அவ்வப்போது திருட்டு நடப்பதை லில்லி பேப்பர்களில் படித்திருக்கிறாள். அப்போது கதவைத் திறப்பது ஆபத்து என்று நினைத்த லில்லி, தன் கணவனுக்கு ஃபோன் செய்ய முடிவெடுத்தாள். ஹாலில் இருந்து போன் செய்ய பெட்ரூமுக்குத...
ஆவிகளின் கோட்டை

ஆவிகளின் கோட்டை

நம்பினால் நம்புங்கள்
லண்டனில் 'லண்டன் டவர்' வளாகத்தில் அமைந்துள்ள பழங்காலக் கோட்டை எட்டாம் ஹென்றியின் ஆதிக்கத்தில் இருந்ததாக சரித்திரச் சான்றுகள் ஆதாரபூர்வமாகக் கூறுகின்றன.இந்தக் கோட்டைக்கு வருடந்தோறும் ஏராளமான டூரிஸ்டுகள், ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கிலுமிருந்து வருகிறார்கள். இந்த பழங்காலக் கோட்டையில் ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்வதாக கடந்த 700 ஆண்டுகளாக பல நம்பத்தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன. அரண்மனை போன்ற இந்தக் கோட்டைக்குள் ஏராளமான பெரிய பெரிய அறைகள் உள்ளன.நீதிமன்றம், தண்டனை வழங்கும் கொலைக் களம், அந்தப்புரம், தர்பார் மண்டபம் என்று பல பிரிவுகள் உள்ளன. இந்தக் கோட்டையை ஆரம்பத்தில் பழுது பார்ப்பதற்காகச் சிதிலான இடங்களை இடித்தார்கள். அங்கே புதிய சுவர்களைக் கட்டினார்கள்.அப்போது, ஒரு பூதாகரமான பாதிரியார் உருவம் ஓடி வந்து அந்தச் சுவரை இடித்தது. அந்தப் பாதிரியாரின் மிருக பலத்தால் சுவர் பொலபொலவென்று இடிந்து வி...
சுமை தாங்கி

சுமை தாங்கி

கவிதை, படைப்புகள்
சிறுவயது முதல் எங்கள் தலையிலே சுமை அலை பாயும் கூந்தலாக..வயதுக்கு வந்தவுடன் உடலியல் மாற்றங்களின் சுமை பொங்கி வரும் இளமையாக..கணவனைக் கைப்பிடித்ததும் வயிற்றிலே சுமை தாய்மை என்னும் கருவாக..பெற்று இறக்கியதும் குழந்தைகளின் தொல்லை அன்புச் சுமையாக..தள்ளாடும் முதுமையிலும் நெஞ்சிலே சுமை மனக்கவலைகளாக..நாங்கள் இன்னும் சபிக்கப்பட்ட உயிரினமாய் பூமித்தாய்க்குச் சுமையாக.- தமிழ் ப்ரியா...
காஸ்ரையிடிஸ் – அமில அபாயம்

காஸ்ரையிடிஸ் – அமில அபாயம்

மருத்துவம்
இன்று இளம் வயதினர் மற்றும் நடு வயதினரையும் பாதிக்கும் பிரதான ஒரு நோயாக வயிற்றில் அமிலம் சுரத்தல் நோய் (Gastritis) காணப்படுகிறது.தொண்டைக் களம் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் கீறல்கள் மற்றும் புண் என்பனவும், முன் சிறுகுடல் என்பன இதற்கு காரணமாக அமைகின்றன. இந்தப் புண் பெப்டிக் அமில புண் (Pepiteutine Diseases) என்று அழைக்கப்படுகிறது.இந்நோய் இரண்டு வகைகளைக் கொண்டது. ஒன்று  பாக்டீரியா தாக்கத்தால் ஏற்படுவது. மற்றொன்று புகைப்பிடித்தல, மதுபானம் அருந்துதல், சில வலி நிவாரண மருந்துவகைகளை அதிகளவில் உட்கொள்ளல், மிளகாய் மற்றும் சரக்குப் பொருட்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளல், மன அழுத்தம், மன நோய், நீண்ட நாட்களாக இருக்கும் புண், சிறுநீரகத்தின் செயற்பாடு குறைவடைதல் போன்ற காரணங்களால் வயிற்றில் மற்றும் சிறுகுடல் சுவர்களில் புண் ஏற்படலாம்.காஸ்ரையிடிஸ் நோயின் அறிகுறிகள்:~வயிற்றின்...
ஷட்டர்(2008) – தீராத காதல்

ஷட்டர்(2008) – தீராத காதல்

அயல் சினிமா, சினிமா
உலகம் முழுவதும் பேய்கள் பற்றியப் பார்வை பெரும்பாலும் ஒரே மாதிரியே இருந்து வருகின்றன. தீராத ஏக்கங்களுடன் தற்கொலை செய்துக் கொண்டாலோ அல்லது அசாம்பாவிதங்களால் நிகழும் துர்மரணங்களாலோ தான் உயிர் பிரிந்தவுடன் ஆவியாக அலைய நேருகிறது. ஆனால் உலகில் உலவும் 90% சதவிகித பேய்கள் பெண்களாகவே பதியப்பட்டுள்ளது. திரைப்படத்தில் வரும் பேய்களும் அதிகபட்சமாக பெண்களாகவே உள்ளனர். இந்த விஷயத்தில் உலகத் திரைப்படங்களுக்குள் தான் எத்தனை ஒற்றுமை!? இதற்கு என்னக் காரணமாக இருக்கும்? பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களின் குற்றவுணர்ச்சியாக இருக்குமோ!? பென்னும், ஜேன்னும் திருமணம் செய்துக் கொள்கின்றனர். பென் ஒரு புகைப்படக் கலைஞன். திருமணம் முடிந்ததும் அமெரிக்காவில் இருந்து ஜப்பான் தலைநகரான டோக்கியோவிற்கு செல்கின்றனர். விமான நிலையத்தில் இறங்கி ஒரு சிவப்பு நிறக் காரில் பயணிக்கின்றனர். இரவு நேரம். ஜேன் கார் ஓட்டிக் க...
ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ஸ்வாமி சரணம் ஐயப்பா!

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
[youtube]http://www.youtube.com/watch?v=rcQCkkVKC5w[/youtube]ஹரிவராசனம் விஷ்வ மோஹனம்ஹரித தீஷ்வரம் ஆராத்ய பாதுகம்ஹரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..சரண கீர்த்தனம்.. பக்த மானஸம்..பரண லோலுபம்.. நர்த்தனாலஸம்..அருண பாசுரம்.. பூத நாயகம்..ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..ப்ரணய சத்யகம்.. ப்ராண நாயகம்ப்ரணத கல்பகம்.. சுப்ர பாஞ்சிதம்ப்ரணவ மந்திரம்.. கீர்த்தனப்ரியம்..ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..துரஹ வாகனம்.. சுந்தரானனம்வரக தாயுதம்.. வேதவர்ணிதம்குருக்ருபாகரம்.. கீர்த்தனப்ரியம்ஹரிஹராத்மஜம...
ஊளைச்சதைக் கோளாறு

ஊளைச்சதைக் கோளாறு

மருத்துவம்
சிலர் உடல் பருத்து சதைகள் தொங்கி நடக்கக் கூட சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதே போல் உடல் எடை அளவிற்கு அதிகமாக அதிகரிப்பதை தான் ஊளைச்சதை (Obesity) என்கிறோம்.மேலை நாடுகளில் இது ஒரு சமூக நோயாகக் காணப்படுகிறது. இந்நோயால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவதால் இது ஓர் சமூக நோயாகக் கருதப்படுகிறது. ஆனால், கீழை நாடுகளில் இது போன்ற பாதிப்புகள் பெரும்பாலானவர்களிடம் காணப்படாததால் இதை ஒரு சமூக நோயாகப் பார்ப்பதில்லை. எனினும் இந்நோய் அதிகரிக்காமல் காக்க வேண்டும். எனவே மக்கள் இதைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு படிவதாலேயே ஊளைச்சதை ஏற்படுகிறது.பொதுவாகவே பல்வேறு காரணங்களை இதற்கு குறிப்பிடலாம். உடல் பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு உணவு வகைகளை உண்ணுதல் ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு அதிகமாக உண்ணப்படும் உணவால் கலோரிகள் கொழுப்புத் திசுவாக மாற்றப...
உணர்ச்சிகள்

உணர்ச்சிகள்

மருத்துவம்
 உடலும், மனமும் வெளிப்படுத்தும் தெரிவிப்புக் குறிகளே உணர்ச்சிகள். சில நேரங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறோம். இரண்டுமே தவறில்லை. ஆனால் உணர்ச்சிகளை அடக்கி வைப்பதுதான் தவறு.அடக்கி வைக்கிற உணர்ச்சிகள் எரிமலையாய் வெடிக்கும். உடல் சார்ந்த விதத்திலும், மனம் சார்ந்த விதத்திலும் அது தீங்கினயே விளைவிக்கும். நம் உடல் சார்ந்த நோய்களில் எழுபது சதவீதமானவை அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளாலேயே வருபவை. அவை கொஞ்சம் கொஞ்சமாய் நம் உடலையும், மனத்தையும் அரித்துத் தின்றுவிடும். "மனக் காயத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவே நாம் உணர்ச்சிகளை அடக்கி வைக்கிறோம்" என்கிறார் தீபக் சோப்ரா. ஆனால் உணர்ச்சிகளை அடக்க முயல்வது தான் உண்மையில் நம்மை வேதனைக்குள்ளாக்கி விடும் என்பதை நாம் உணருவதில்லை. நாம் உணர்ச்சிகளை எவ்வளவு தான்அடக்கி வ...
உயிரோடு இருங்கள்

உயிரோடு இருங்கள்

கவிதை, படைப்புகள்
என்னது? ஊருக்கு ரோடு கேட்டு உண்ணாவிரதமா?இட ஒதுக்கீடு கேட்டு நடைப் பயணமா?சேற்றில் மிதக்கும் இந்த சேரிக்குள் நடப்பதா? என்னால் முடியாது!உங்கள் வயிறு எரிந்தால் போதாதா? தெருவிளக்கும் எரியணுமா?தண்ணீர் இல்லை என்கிறீர்கள் அப்படி என்றால் கண்ணீர் ஏது?இலஞ்சம் வாங்கினேன் என்கிறீர்கள் நீரூபிக்க முடிந்ததா?என்ன வயதாகிவிட்டது என்னைப் போய் உண்மை பேசச் சொல்கீறீர்கள்தூரமாய் நில்லுங்கள் தொட்டுத் தொட்டு 'காரை' அழுக்காக்கி விட்டீர்கள்!நீங்கள் சிரித்தாலும் பரவாயில்லை அழுதாலும் பரவாயில்லை உயிரோடு இருங்கள் எனக்கு ஓட்டுப் போட வேண்டும்!- தமிழ் ப்ரியா...