Shadow

Tag: தயாரிப்பாளர் அரவிந்த் வெள்ளைபாண்டியன்

யோகிபாபு, இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’

யோகிபாபு, இனியா நடிக்கும் ‘தூக்குதுரை’

சினிமா, திரைத் துளி
மிகச் சில நகைச்சுவை நடிகர்கள்தான் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல் தனித்துவமான கதாபாத்திர வேடங்களிலும் திறமையாக நடிக்கிறார்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாகவும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் மட்டுமில்லாமல் குணசித்திர வேடங்களிலும் நன்றாக நடிக்கக் கூடியவர் யோகிபாபு. நாயகனாகவும் நடித்து முத்திரை பதித்துள்ளார். அதே போல், யோகிபாபு கதையின் முக்கிய பாத்திரமாக நடிக்க இருக்கும் புதியப் படத்திற்கு ‘தூக்குதுரை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகை இனியா கதையின் நாயகியாக நடிக்கிறார். அட்வென்ட்சர் த்ரில்லர் படமான ‘ட்ரிப்’ படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். ’தூக்குதுரை’ திரைப்படம் 'PRE' (Period-Royal-Entertainer) ஜானர் வகையைச் சேர்ந்தது. மூன்று மாறுபட்ட காலங்களில், அதாவது 19ஆம் நூற்றாண்டு, 1999 ஆம் ...