Shadow

Tag: தயாரிப்பாளர் இந்து கருணாகரன்

தொரட்டி விமர்சனம்

தொரட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலைப் பேசும் ஓர் அற்புதமான படம். ‘துறட்டி’ என்றால் மேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு. துறட்டி என்பதன் பேச்சுவழக்கு மழூஉ தான் தொரட்டி. தொரட்டி என்பது ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு கீதாரிகளின் கையுள்ள கருவியாகும். கீதாரிகளின் வாழ்வியலைத் தொட்டு விட்டு, பின் படம் கூடா நட்பு கேடாய் விளையும் என்பதை நோக்கிப் பயணிக்கிறது. மாயன் எனும் பாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார் ஷமன் மித்ரு. பெற்றோர் பேச்சோ, மனைவி பேச்சோ கேட்காமல், குடிக்காரக் கள்ளர்களோடுநட்பைப் பேணுகிறார் நாயகன். அதற்காக நாயகன் கொடுக்கும் விலை மிகப் பெரியது. அலட்டலில்லாத நடிப்பில் கதையின் போக்கிற்கு நியாயம் செய்துள்ளார். எளிமையான கதைக்களத்தைத் தன் ஒளிப்பதிவால் மிகச் சிறந்த பதிவாக மனதில் ஊடுருவ விட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் குமார...
தொரட்டி – மண் வாசனையும், மரப்பாச்சிப் பொம்மையும்

தொரட்டி – மண் வாசனையும், மரப்பாச்சிப் பொம்மையும்

சினிமா, திரைச் செய்தி
ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை SDC பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் மாரிமுத்து, "ஆடு மேய்ப்பவர்கள், ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்குத் தொரட்டியைப் பயன்படுத்துவார்கள். மேலும் தொரட்டி, ஆடு மேய்ப்பவர்களின் ஆறாவது விரல் போன்றது. இந்தப் படத்தில் சினேகன் சார் பாடல்களை மிக அழகாக எழுதித் தந்தார். சமீப காலமாகக் கலைப் படைப்புகளுக்கு வர்ணம் பூசும் நிலைமை இருக்கு. இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை. தயவு செய்து இதற்கு எந்தச் சாதிச்சாயமும் பூச வேண்டாம...