எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸின் ‘அயலி’ வெற்றிப் பகிர்வு
அண்மைக்காலமாக வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற இணைய தொடர்களில், தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தை மட்டும் சாதகமாக எடுத்துக் கொண்டு செயற்கையான ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காக அதீத வன்முறை, பாலுணர்ச்சி மிகுந்து பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும்படியான காட்சிகள் வசனங்கள் என்று உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இவற்றுக்கு மத்தியில் அண்மையில் வந்த 'அயலி' என்கிற இணைய தொடர் ஒரு மக்களுக்கான தொடராக மாறி பார்த்தவர்கள் பாராட்டி அடுத்தவர்களுக்கு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து பரிந்துரைக்கும் படியான ஒரு தொடராக வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தொடர் இணைய வழியை நோக்கி வெகுஜன மக்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்ததே இந்தச் சிறப்புக்குக் காரணம். இத்தொடர் ஜீ5 தமிழில் வெளியானது.
தயாரிப்பாளர் எஸ். குஷ்மாவதி என்கிற பெண்மணி இதைத் தனது 'எஸ்ட்ரெல்லா ஸ்டோரீஸ் (Estrella stories)’ நிறுவனத்தின் சார்பில...