Shadow

Tag: தயாரிப்பாளர் தில் ராஜு

கேம் சேஞ்சர் – அமெரிக்காவில் முன் வெளியீட்டு விழா

கேம் சேஞ்சர் – அமெரிக்காவில் முன் வெளியீட்டு விழா

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைத் துளி
பிரபல முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம் “கேம் சேஞ்சர்” ஆகும். இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் தமிழ்ப் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிறது. இரண்டு மெகா ஸ்டார் தயாரிப்பாளர்களான திரு.தில்ராஜு & திரு.ஆதித்யராம் இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் ஏற்கெனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இந்திய சினிமாவில் முதன்முறையாக, கேம் சேஞ்சர் திரைப்படக்குழு, அமெரிக்காவில் டிசம்பர் 21, 2024 அன்று டெக்சாஸின் கார்லண்டில் உள்ள கர்டிஸ் குல்வெல் மையத்தில், ஆடம்பரமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. கரிஸ்மா ட்ரீம்ஸின் ராஜேஷ் கல்லேபள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட...
The Family Star | குடும்பப் பொருளாதர நிலையை உயர்த்தப் போராடும் விஜய் தேவரகொண்டா

The Family Star | குடும்பப் பொருளாதர நிலையை உயர்த்தப் போராடும் விஜய் தேவரகொண்டா

சினிமா, திரைச் செய்தி
தெலுங்கிலும், தமிழ்த் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களைத் தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் 'தி ஃபேமிலி ஸ்டார்'. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை கே. யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு படக்குழுவினர் தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுப...
‘மதுரமு கதா’ பாடல் | ஃபேமிலி ஸ்டார்

‘மதுரமு கதா’ பாடல் | ஃபேமிலி ஸ்டார்

Songs, அயல் சினிமா, காணொளிகள்
விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி வரும் "தி ஃபேமிலி ஸ்டார்" திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'மதுரமு கதா' பாடலின் லிரிகல் வீடியோ, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள ‘மை ஹோம் ஜூவல் கேட்டட் கம்யூனிட்டி’யில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொள்ள, ‘மை ஹோம் ஜூவல்’ குடும்பத்தினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹோலி பண்டிகை நாடகம், நடனம் மற்றும் திரைப்படக் குழுவினருடன் புகைப்படங்கள் எனக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தயாரிப்பாளர் தில் ராஜு, "எங்கள் 'தி ஃபேமிலி ஸ்டார்' படக்குழுவை உற்சாகமாக வரவேற்ற அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி. 'தி ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகிறது. 'தி ஃபேமிலி ஸ்டார்' என்றால் என்ன என்பதை அ...
வாரிசு விமர்சனம்

வாரிசு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தொழிலதிபர் ராஜேந்திரன் பழனிச்சாமிக்கு, ஜெய், அஜய், விஜய் என மூன்று மகன்கள். தனது தொழில் வாரிசாக அவர் எந்த மகனை நியமிக்கப் போகிறார் என முடிவெடுக்கக் கதையில் எழு வருடமும், படத்தில் ஒரு மணி நேரம் பத்து நிமிடங்களும் எடுத்துக் கொள்கிறார் ராஜேந்திரன். ராஜேந்திரனின் மகுடம் அவரது இளைய மகன் விஜய் ராஜேந்திரனிடம் போகிறது. பிளவுப்படும் குடும்பத்தையும், ராஜேந்திரன் எழுப்பிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், விஜய் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒரு நாயகன் மாஸாகவோ, பாஸாகவோ பரிணாமம் அடைய, வலுவானதொரு வில்லன் தேவை. படத்தில், சொல்லிக் கொள்ளும்படியான வில்லத்தனத்தை ஜெய், அஜயாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்தும் ஷாமுமே செய்து விட, தொழிலதிபர் ஜெயபிரகாஷாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜின் பாத்திரம் டம்மி வில்லனாகக் காற்று போன பலூனாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்கு முன் விஜயே கடுப்பாகி, ...