
மதர் | தற்கால கணவன் மனைவி உறவுச்சிக்கல் பற்றிய படம்
ரேசர் என்டர்பிரைசஸ் வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “மதர்” ஆகும். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி உறவு சிக்கலனாதாக மாறியுள்ளது.ஒரு சிறு சந்தேகம் ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். நவீன கால தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி, குடும்பத்தோடு அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில், ஓர் அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
எழுத்தாளர் ரூபன் கதை வசனம் எழுதியுள்ளார். பிரபல இயக்குநர் வின்சென்ட் செல்வா, இப்படத்தின் திரைக்கதை எழுதியிருப்பதுடன் தயாரிப்பு மேற்பார்வை பணிகளையும் செய்துள்ளார். இப்படத்தை இயக்கியிருப்பதுடன் நாயகனாகவும் நடித்துள்ளா...


