Shadow

Tag: தயாரிப்பாளர் ஹஷீர்

‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க!’ – தயாரிப்பாளர் அதிரடி

‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க!’ – தயாரிப்பாளர் அதிரடி

Others, காணொளிகள், சினிமா, திரைத் துளி
சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கெனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காகப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக்கை பரிசு அளிப்பதாக அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்துப் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவித்திருக்கிறார் படத் தயாரிப்பாளர் ஹஷீர். இந்தப் படத்தில்,க் ஆணவ கொலைகளுக்கு...
‘கன்னி மாடம்’ படக்குழு – வெற்றிக் கொண்டாட்டம்

‘கன்னி மாடம்’ படக்குழு – வெற்றிக் கொண்டாட்டம்

சினிமா, திரைத் துளி
ரூபி பிலிம்ஸ் ஹஷீர் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்தி, சாயா தேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், ப்ரியா ரோபோ ஷங்கர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘கன்னி மாடம்’. ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவான இப்படம், அனைத்துth தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று சென்னை ஏவி.எம் ராஜேஷ்வரி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாகப் படம் பார்த்த படக்குழுவினர் அனைவரும், அவர்களோடு படத்தின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். வெற்றியை மிகப்பெரும் கேக் வெட்டி, ரசிகர்களுக்குக் கொடுத்தும், படக்குழுவினர் அனைவரும் பகிர்ந்தும் தங்களது வெற்றியைக் கொண்டாடினர். மேலும், இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹரீஷ் சாய், ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரீஷ், ...
கன்னிமாடம் விமர்சனம்

கன்னிமாடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கன்னிப் பெண்கள், கர்ப்பினிப் பெண்கள், பெண் துறவிகள் என பெண்கள் தனியே தங்கும் இடத்திற்குப் பெயர் கன்னிமாடம் ஆகும். இந்தப் படத்தின் நாயகியான மலர்க்கோ தங்க ஓரிடம் இல்லா மல் தவிக்கிறார். படத்தின் தகிப்பிற்குக் காரணமோ, படம் தொட்டுள்ள ஆணவக்கொலை எனும் விஷயமாகும். நாயகன் அன்புவின் தங்கையை, அவனது தந்தையே சாதி ஆணவத்தில் படுகொலை செய்து விடுகிறார். தன் குடும்பமே சிதைந்துவிட்டது என வருத்தத்தில் இருக்கும் அன்பு, சென்னைக்கு ஓடி வரும் மலர் - கதிர் ஜோடியை அரவணைக்கிறான். கதிர் விபத்தில் இறந்து விட, நிராதரவாய் இருக்கும் கர்ப்பிணியான மலரைப் பாதுகாக்கும் பொறுப்பு அன்புவிற்கு ஏற்படுகிறது. இந்தச் சமூகக் கட்டமைப்பில் அது அத்தனை எளிதான காரியமா என்ன? அன்புக்கு நேரும் சோதனையும் சவால்களும் தான் படத்தின் கதை. 'இன்னுமா சாதி பார்க்கிறாங்க?' என அப்பாவித்தனமாய்க் கேட்கும் கவுன்சிலர் அழகுராணியாக ரோபோ ஷங்கரின் மனைவி பி...
கன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை

கன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை

சினிமா, திரைச் செய்தி
முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார் போஸ் வெங்கட். அவர் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தைப் பிடித்திருப்பவர். தற்போது புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். விழாவில் பேசிய ரோபோ சங்கர், “நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது. முதல் முறையாகப் பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னைப் பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹரி சாய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு அண்ணன் போஸ் வெங்கட்டுக்கு நன்றி. அவர் என் வாழ்வில் ஒவ்வொரு படியிலும் பேருதவியாக நின்றிருக்கிறார். பல வருடங்கள் முன்பாகவே இந்தக் கதையை என்னிடம் கூறியுள்ளார். ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். தான் முதன் முதலா...
வண்டி விமர்சனம்

வண்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
டுட்டூ (Duttu) எனும் மஞ்சள் நிற யமஹா RX 135-இன் மூன்று பயணங்களைப் பற்றிய கதை இது. வேலைக்குச் செல்ல கிருஷ்ணாவிற்கு ஒரு டூ-வீலர் தேவைப்படுகிறது; செயினை அறுத்து நகையைக் கொள்ளையடிக்க டிக்‌ஷனிற்கும் செளகத்துக்கும் ஒரு பைக் தேவைப்படுகிறது; காதலி ரீத்தாவை ஷாப்பிங் கூட்டிச் செல்ல தீபக்கிற்கு ஒரு வண்டி தேவைப்படுகிறது. டுட்டூவில் நடக்கும் இந்த மூன்று பயணங்களையும், வேலைப் பயணம், சாகசப் பயணம், காதல் பயணம் என மூன்று அத்தியாயங்களாய்ப் பிரித்து, ஒரு நேர்க்கோட்டில் இணைக்கிறது திரைக்கதை. பயண அத்தியாயங்கள் தொடங்கும் முன், கிருஷ்ணாவின் வாழ்விடம் பற்றியும், அவனது நண்பர்கள் பற்றியும் மிக நீண்டதொரு அத்தியாயம் உள்ளது. விதார்த்திற்கு கிருஷ்ணாவாக நடிக்க நல்லதொரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார் இயக்குநர் ரஜீஸ்பாலா. ஆனால், சத்தமாக வாயு பிரித்து, ரபீக் தான் அந்த வளாகத்தில் இருப்போரை எழுப்பிவிடுவான் என்பதெல்லா...