Shadow

Tag: தருண் பாஸ்கர் தாஸ்யம்

பெல்லிசூப்புலு இயக்குநரின் ‘கீடா கோலா’

பெல்லிசூப்புலு இயக்குநரின் ‘கீடா கோலா’

சினிமா, திரைத் துளி
இளம் மற்றும் திறமையான இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கிய 'பெல்லிசூப்புலு' மற்றும் 'ஈ நாகராணிக்கி ஏமைந்தி' ஆகிய இரண்டு படங்களும் தடபுடல் வெற்றியைப் பெற்றன. இவ்விரு படங்களையும் விமர்சகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய நிலையில் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் குவிந்தது. அவ்வகையான யூத் ஃபுல் என்டர்டெய்னர் படங்களை எடுப்பதில் கில்லாடி என்று பெயர் எடுத்த இயக்குநர் தருண் பாஸ்கர் தாஸ்யம், இம்முறை தனது டிராக்கை மாற்றிக் கொண்டு புதிய க்ரைம் காமெடி படமான ‘கீதா கோலா’வைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு வரவிருக்கிறார். விஜி சைன்மா பேனரில் புரொடக்ஷன் நம்பர் 1 ஆக வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று செவ்வாயன்று நடைபெற்றது. இந்தத் துவக்க விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, ஹீரோக்கள் சித்தார்த், தேஜா சஜ்ஜா, நந்து மற்றும் பல இளம் இயக்குனர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்...