Shadow

Tag: தலைவாசல் விஜய்

Once Upon A Time In Madras விமர்சனம்

Once Upon A Time In Madras விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தன் வீட்டு மரத்து மாங்காயை அடித்துத் தின்ற சிறுவனைத் துப்பாக்கியில் சுடுகிறார் ஒரு முன்னாள் இராணுவ வீரர். வழக்கிற்கு அஞ்சி, அந்தத் துப்பாக்கியைக் கூவத்தில் வீசி எறிகிறார். அந்தத் துப்பாக்கி, யார் யார் கைகளில் கிடைக்கிறது, அவர்கள் வாழ்வில் என்ன நேருகிறது என்பதுதான் படத்தின் ஒரு வரிக்கதை. நான்கு கதைகளை இணைக்கும் hyperlink ஆகப் படத்தின் திரைக்கதை பயணிக்கிறது. மகளாகப் பருவ மாற்றம் அடையும் மகனைப் பெற்ற தாயிடமும், அரசியல் கொலை புரியும் கொலைக்காரன்க்கு உடந்தையாக இருக்கும் ஓட்டுநரிடமும், டொமஸ்டிக் வயலன்ஸிற்கு உள்ளாகும் புது மருமகளிடமும், சாதிவெறி பிடித்த பத்திரிகையாளரிடமும் துப்பாக்கி கிடைக்கிறது. படத்தின் முதற்பாதி, கோர்வையற்ற காட்சிகளாக நகர்ந்து இடைவேளையில் ஆவலைத் தூண்டும் விதமாக முடிகிறது. இரண்டாம் பாதியின் முடிவில் எல்லாக் கதைகளும் ஒரு நேர்க்கோட்டில் இணைந்து திருப்திக்கரமாகப் படம் முடிகிறது....
கடைசி உலகப்போர் விமர்சனம்

கடைசி உலகப்போர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஐ.நா.வில் இருந்து பிரியும் சீனாவும் ரஷ்யாவும், 'ரிபப்ளிக் (O.N.O.R.)' எனும் கூட்டமைப்பை உருவாக்கி, அமீரகம், இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் முதலிய எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கிறது. ரிபப்ளிக்கில் இணையாத அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மீது போர் தொடுக்கப்படுகிறது. இந்தியாவுடனான தொடர்பில் இருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட்டு அல்லலுகிறது. இலங்கையின் தனிப்படையினர் உதவியோடு, தமிழ்நாட்டை தன்வசத்திற்குக் கொண்டு வருகிறான் சீனன் ஒருவன். தமிழ்நாட்டு முதல்வர் நாசரை மிரட்டி தமிழ்நாட்டை ரிபப்ளிக்கில் சேர்த்துவிடுகிறான். நாயகன் தமிழ் எப்படித் திட்டமிட்டு தமிழ்நாட்டை சீன ரிபப்ளிக் ஆதிக்கத்தில் இருந்து மீட்கிறான் என்பதே கதை. கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம், தயாரிப்பு என இந்தப் படத்தின் ஆல்-இன்-ஆல் ஹிப்ஹாப் தமிழா ஆதிதான். ஆசையும் அனுபவமின்மையும் சேரும் புள்ளிதான் இப்படத்தின் மையக்கரு. ...
கடைசி உலகப்போர் – ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே

கடைசி உலகப்போர் – ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே

சினிமா, திரைச் செய்தி
ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் "கடைசி உலகப்போர்" ஆகும். மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுந்தர். சி, "என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார். அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது. ...
Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கானின் ஆளுகைக்கு உட்பட்ட ஹைதராபாத் மாகாணத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பங்களையும், அதன் விளைவாக ஹிந்துக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும் பற்றிப் பேசுகிறது இப்படம். மிர் ஒஸ்மான் அலி கானை யோசிக்கவிடாமல், எப்படி காஸிம் ரஸ்வி, ரஸாக்கர் ஆயுதப்படையை உருவாக்கி ஹைதராபாத் மாகாணத்து மக்கள் மீது வரிச் சுமையையும், ஹிந்து மத சடங்குகளையும் திருவிழாக்களையும் பொதுவில் கொண்டாடத் தடையையும் விதித்தார் என்பதே படத்தின் திரைக்கதை. பாஜகவைச் சார்ந்த குடூர் நாராயண ரெட்டி, இப்படத்தை சுமார் 40 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளார். முதல் பாதி முழுவதுமே, காணச் சகியாக் காட்சிகளாகவே உள்ளன. ஊரைக் கொளுத்துவது, பெண்களைப் பலாத்காரம் செய்வது, எதிர்ப்பவர்களைக் கொல்வது என ரஸாக்கர்களின் கொடுமையை விரிவாகக் காட்டுகின்றனர். வரலாற்றைத் தெரிய...
“ஒரு பெண் எப்படி ஆணைக் கொடுமைப்படுத்துகிறாள்” – விஜய் ஆண்டனி | ரோமியோ

“ஒரு பெண் எப்படி ஆணைக் கொடுமைப்படுத்துகிறாள்” – விஜய் ஆண்டனி | ரோமியோ

சினிமா, திரைச் செய்தி
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'ரோமியோ' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. 'ரோமியோ' திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி இருவரும் 'ரோமியோ' படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நடிகர் தலைவாசல் விஜய், "இந்த பிளாக்பஸ்டர் படத்தில் நானும் ஒரு பங்கு என்பதில் மகிழ்ச்சி. இந்தப் படம் விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் பெரிய மாற்றம் கொடுக்கும். அந்த அளவுக்கு நல்லவர். பெரிய துன்பத்தைத் தனது மனவலிமையால்...
சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறுவயதில் சலூன் கடைக்கு முடி திருத்தம் செய்யப் போகும் போது இல்லாத தன்னம்பிக்கை முடி திருத்தம் செய்து முந்நூற்று அறுபது டிகிரி கண்ணாடிகளில் நம்மையும் திருத்தப்பட்ட நம் தலையையும் பார்த்து,, “ச்சே நாம கூட நல்லாதான்டே இருக்கோம்…” என்று மனதுக்குள் மகிழ்ந்தபடி வெளியேறும் போது தன்மானம் தாறுமாறாக ஏறியிருக்கும். நம்மை இப்படி அழகாக்கி அனுப்பிய சலூன் கடைக்காரர் மீது மரியாதை கலந்த அபிமானமும்,  அதே சீப்பு தான் வீட்டிலும் இருக்கிறது, ஆனால் இவர் சீவுவது மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது என்கின்ற கேள்வியோடு வீடு திரும்புவோம். இந்த அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு அனுபவம் தான் படத்தின் நாயகனாக வரும் ஆர்.ஜே.பாலாஜிக்கும்  முடி திருத்துநராக வரும் லால் இருவருக்கும் இடையே நடக்கிறது. மேற்சொன்னபடி அப்படியே நடக்காமல் அறிமுகம் வேறு ஒரு புதிய திணுசில் ரசிக்கும்படியே நடக்க...