Shadow

Tag: தலைவெட்டியான் பாளையம்

தலைவெட்டியான் பாளையம் மக்களைக் கவருவதற்கு ஜி.பி. முத்தான யோசனைகள்

தலைவெட்டியான் பாளையம் மக்களைக் கவருவதற்கு ஜி.பி. முத்தான யோசனைகள்

OTT, Web Series
தலைவெட்டியான் பாளையம் முன்னோட்டத்தைத் தொடர்ந்து, இந்தத் தொடர் மீது ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஜி.பி. முத்துவும் அபிஷேக் குமாரும், இந்தத் தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்களை ஒட்டி ஒரு அட்டகாசமான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஜி.பி. முத்து, அபிஷேக்குமாருக்கு தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங்காக மாற ஐந்து அருமையான யோசனைகளைத் தருகிறார். 1. எப்போதும் ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது. 2. சம்பிரதாயமாக நடந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் இந்தக் கிராமத்தில் யாரும் புதியவரில்லை. 3. இயல்பாகப் பழக வேண்டும். அதே நேரம் புத்திக் கூர்மையுடன் இருக்க வேண்டும். 4. பிரச்சனைகளிலிருந்து எப்போதும் ஒதுங்கி இருக்கவேண்டும். 5. முக்கியமாக பேய் மரத்தை விட்டு எப்போதும் ஒதுங்கியே இருக்கவேண்டும் 'இதையெல்லாம் ஒழுங்காகப் பின்பற்றினால், தலைவெட்டியான் பாளையத்தின் விசித்திரமான கிராமவாசிகளுக்குப் பிட...
தலைவெட்டியான் பாளையம் – ட்ரெய்லரும் பேட்டியும்

தலைவெட்டியான் பாளையம் – ட்ரெய்லரும் பேட்டியும்

OTT, Trailer, காணொளிகள்
இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான 'தலைவெட்டியான் பாளையம்' எனும் தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ‘தலை வெட்டியான் பாளையம்’ இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக வெளியாகிறது. இத்தொடரின் முன்னோட்டத்தை செப்டம்பர் 13 அன்று வெளியிட்டது பிரைம் வீடியோ. எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த நகைச்சுவை இணைய தொடர், தமிழகத்தின் தொலைதூர கிராமமான தலைவெட்டியான் பாளையத்திற்குச் செல்லும் மாநகரத்தைச் சேர்ந்த ஒருவரின் பயணத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. இந்த இணைய தொடரில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் ...
தலைவெட்டியான் பாளையம் | செப்டம்பர் 20 தேதி முதல்

தலைவெட்டியான் பாளையம் | செப்டம்பர் 20 தேதி முதல்

OTT, Web Series
எட்டு அத்தியாயங்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி, பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். பால குமாரன் முருகேசன் எழுத்தில், நாகா இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடரை ‘தி வைரல் ஃபீவர் (TVF)’ நிறுவனம் தயாரித்திருக்கிறது. ‘தலைவெட்டியான் பாளையம்’, இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 20 அன்று பிரத்தியேகமாக திரையிடப்பட உள்ளது. தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்), வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர், அவரைப் பின் தொடர்கிறது...