Shadow

Tag: தினேஷ் புருஷோத்தமன்

லவ் டுடே விமர்சனம்

லவ் டுடே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இன்றைய காதல் என்பதை விட இன்றைய இளைஞர்கள் பற்றிய படம் என்பதே பொருத்தமாக இருக்கும். App(a) Lock என்ற தனது குறும்படத்தை முழு நீளத் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இன்றைய யூத்களின் பல்ஸைக் கச்சிதமாகப் பிடித்து, காமெடி, காதல், சென்டிமென்ட், எமோஷன் என கலந்து கட்டி எழுதி இயக்கி நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். காலதாமதமான (Belated) தீபாவளிக் கொண்டாட்டத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வந்துள்ளனர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட். உத்தமன் பிரதீப்பும், நிகிதாவும் காதலிக்கின்றனர். நிகிதாவின் தந்தை வேணு சாஸ்திரி, காதலர்கள் இருவரின் மொபைல் ஃபோன்களையும் மாற்றிக் கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்களா என தெரிந்து கொள்ள ஒரு வினோதமான நிபந்தனை விதிக்கிறார். உத்தமனின் ஃபோன் நிகிதாவிடமும், நிகிதாவின் ஃபோன் உத்தமனிடமும் செல்ல திரைக்கதை சூடு பிடிக்கிறது. தனது முதற்படமான கோமாளியில் யோகிபாபுவைக் குண...