Shadow

Tag: தினேஷ் மாஸ்டர்

நின்னு விளையாடு | ஜல்லிக்கட்டு காளையா? காதலா?

நின்னு விளையாடு | ஜல்லிக்கட்டு காளையா? காதலா?

இது புதிது, சினிமா, திரைத் துளி
ராஜ் பீகாக் மூவீஸ் சார்பில் எம். கார்த்திக் தயாரிக்கும் படம் ‘நின்னு விளையாடு’ ஆகும். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் மாஸ்டரும், கதாநாயகியாக நந்தனா ஆனந்தும் நடிக்கின்றனர். தீபா சங்கர், பழ. கருப்பையா, ‘பசங்க’ சிவக்குமார், சாவித்திரி, சங்கவி, ஜோதி, மதுரை குமரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக சத்திய தேவ் உதயசங்கரும், ஒளிப்பதிவாளராகப் பிச்சுமணியும், படத்தொகுப்பாளராக கி. சங்கரும் தொழில்நுட்பப் பணிகளைக் கவனிக்க, சி. சௌந்தர்ராஜன் படத்தினை இயக்குகிறார். எம். சரத்குமாரும், கீர்த்தி வாசனும் இணைந்து தயாரிக்கின்றனர். மண்வாசம் கலந்த மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது இப்படத்தின் கதை. காளை மாடு வளர்க்கும் சாமானியனின் வாழ்வில், குடும்ப உறவுகளுக்கு மத்தியில் காதலா, காளை மாடா என்ற உணர்வுப்பூர்வமான பாசப்போராட்டத்தை கருவாகக் கொண்டது படத்தின் கதைக்களம். ஜாதி, மதங்களை ஒன்ற...
ஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்

ஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்

சினிமா, திரைச் செய்தி
‘ஆடுகளம்’ படத்திற்குத் தேசிய விருதை வென்ற டான்ஸ் மாஸ்டர் தினேஷ், “ஒரு குப்பைக் கதை” எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வழக்கு எண் மனிஷா நடித்துள்ளார். பாகன் படத்தின் இயக்குநரான அஸ்லம், தன்னிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த காளி ரங்கசாமியை இயக்குநராக அறிமுகம் செய்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தின் மூலம், மே 25 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். மே 16 அன்று, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விஜய் சார் நடித்த குருவி படம் மூலமாகத் தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருட...