Shadow

Tag: தினேஷ் ராம்

1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்

1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்

புத்தகம்
1729 என்பது ஆயிஷா நடராஜனின் புது நாவல். இந்த எண்ணைப் பற்றிய கதை மிகப் பிரபலமானது. நோய்வாய்ப்பட்டிருந்த கணித மேதை ராமானுஜரை அவரது நண்பர் ஹார்டி மருத்துவமனையில் பார்க்கப் போவார். அப்பொழுது, தான் வந்த டேக்ஸியின் நம்பரான 1729 இல் எந்தச் சுவாரசியுமும் இல்லை என அலுத்துக் கொள்வார் ஹார்டி. நோயுற்று, படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்த ராமானுஜர், சட்டென உற்சாகமாகி அந்த எண்ணின் சிறப்பைச் சொல்லுவார்.      என்பதே அதே! ஹார்டி இதை வெளியுலகிற்கு விவரித்த பின், 1729 என்பது 'ராமானுஜன் - ஹார்டி எண்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. இந்த நாவலுக்கு, இந்த எண்ணை விடப் பொருத்தமான தலைப்பு வேறென்ன இருக்க இயலும்!? 80 பக்க நாவல் தான் என்றாலும் படிக்க அவ்வளவு சிரமமாக உள்ளது. முன்னுரை எழுதியுள்ள ச.தமிழ்ச்செல்வன், "பல இடங்களில் கண்களில் நீர் திரையிட வாசித்தேன். சில இடங்களில் மேற்கொண்டு தொடர்ந்து வ...
காலா: ரெளடியா? தலைவரா? – ரஞ்சித்தின் அரசியல்

காலா: ரெளடியா? தலைவரா? – ரஞ்சித்தின் அரசியல்

சினிமா
சுவர் அரசியலைக் கலாபூர்வமாக வழங்கிய ரஞ்சித் எங்கே போனார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. சமூக அறிவுடன் கூடிய கல்வியின் அவசியத்தைச் சொன்ன ரஞ்சித்தால் 'காலா'வில் எதையும் சொல்ல முடியவில்லை. சமூக ஆவேசத்தில் தன்னைத் தொலைத்துக் கொண்ட பரிதாபமான படைப்பாளியாய்த் தெரிகிறார். 'மனு பில்டர்ஸ்' எனப் பெயர் வைப்பதெல்லாம் சரி. ஆனால், அதெல்லாம் name dropping போல் உபயோகிப்படுகிறதே தவிர, காவி அரசியலைக் கழுவி ஊற்றும் குறியீடெல்லாம் இல்லை. இல்லவே இல்லை. படம் நெடுகேவும் காலாவை ஒரு காமெடியனாகவே அணுகுகிறார் ரஞ்சித். மகா பரிதாபம். ஓர் உதாரணத்துடன் பார்க்கலாம். காலா கூட்டத்தில் இருந்து ஆவேசமாக எழுந்து நடக்கும் பொழுது, ஒருவர் ஓடி வந்து அவருக்குக் குடை பிடிக்கிறார். ஆண்டானுக்குச் சாமரம் வீச வேண்டியது அடிமையின் பாக்கியம் என்ற மேட்டிமை எண்ணம் காலாவிற்கு உள்ளதாக ரஞ்சித் சித்தரிக்கிறாரா? காலா எனும் ரெளடியின் மீது மக்களுக்க...
ஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்

ஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்

புத்தகம்
மிகவும் பிரபலமான குழந்தைகள் எழுத்தாளரும் ஓவியருமான ப்யாட்ரிகஸ் பாட்டரின் கதைகளை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர் வானம் பதிப்பகம். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதியின் மிக எளிமையான மொழிபெயர்ப்பு இந்நூலின் பெரும் வரபிரசாதம். ஒரு மொழிபெயர்ப்பினைப் படிக்கிறோம் என்ற அயற்சியைத் தராமல் நேரடி தமிழ்க் கதையைப் படிப்பது போல் உள்ளது சிறப்பு.  1866 ஆம் ஆண்டு பிறந்த ஹெலன் ப்யாட்ரிக்ஸ் பாட்டரின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவரது வயதினையொத்த சிறுவர்களுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. பிராணிகளை வளர்ப்பது தான் அவரது முன் இருந்த ஒரே பொழுதுபோக்கு. இங்கிலாந்தில் பிறந்த அவரது விடுமுறைக் காலம் இயற்கை எழில் கொஞ்சும் ஸ்காட்லாந்தில் கழிந்தது. இத்தகைய சூழலில் வளர்ந்தவர், பின்னாளில் ‘ஹெர்ட்விக் ஆட...
மரப்பாச்சி பொம்மையின் சாகசம்

மரப்பாச்சி பொம்மையின் சாகசம்

புத்தகம்
செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்கள் தான் இந்நூல். சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சொன்ன பாலபாரதியின் சிறுவர் நூலான 'ஆமை காட்டிய அற்புத உலகம்' போல், மரப்பாச்சியும் மிக மிக முக்கியமான சமூக விஷயமொன்றைத் தொடுகிறது. பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பாற்ற தொடுதல் (Good touch, Bad touch) பற்றி மிக எளிமையானதொரு புரிதலை ஒரு கதையின் மூலம் உருவாக்குகிறது. நல்ல, கெட்ட என்ற சொல்லுக்கு மாற்றாக பாதுகாப்பான, பாதுகாப்பாற்ற எனும் சொற்களைப் பாலபாரதி பயன்படுத்தியுள்ளது சிறப்பாய் உள்ளது. தனக்கு நேருவதைப் பெற்றோர்களிடம் சொல்லவே பூஜா தயங்கும் பொழுது, மரப்பாச்சிப் பொம்மை அவளுக்கு க்யூட்டாய் உதவுகிறது. உதவுவதோடு அல்லாமல், மரப்பாச்சியான செஞ்சந்தன இளவரசி பூஜாவிற...
எம்.ஜி.ஆருக்கு மலையாளிகளைப் பிடிக்காது

எம்.ஜி.ஆருக்கு மலையாளிகளைப் பிடிக்காது

அரசியல், கட்டுரை, சினிமா, புத்தகம்
ஈராக்கில் பணி புரியும் ஐ.நா. சபை அதிகாரியான ஆர்.கண்ணன், “MGR: A Life” எனும் புத்தத்தை எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா, 2017 ஜூலை 8ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. புத்தகத்தை பாராளமன்ற உறுப்பினர் திரு. சசி தரூர் வெளியிட, எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவரான திரு.இராம.வீரப்பன் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய சசி தரூர், “நானும் எம்.ஜி.ஆரின் ஊரான பாலக்காட்டைச் சேர்ந்தவன் தான். எனது குழந்தைப் பருவத்தின் ஹீரோ அவர். என் சகோதரர்களுடன் பல எம்.ஜி.ஆர். படங்களை ரசித்திருக்கிறேன். எம்.ஜி.ஆர். தான் இந்திய அரசியலில் சாதித்த முதல் சினிமா சூப்பர் ஸ்டார். தமிழ்நாட்டில், தேசிய கட்சிக்கும், மாநில கட்சிக்கும் இருந்த அரசியல் போட்டியை, மாநில கட்சிகளுக்கு இடையேயான போட்டியாக மற்றியவர் எம்.ஜி.ஆர். முப்பது வருடங்கள் முடிந்த பிறகும், எங்களையும் (காங்கிரஸ்) சேர்த்து எந்தத் தேசியக் கட்சிகளாலும் த...
அருவி சுருங்கிய புள்ளி

அருவி சுருங்கிய புள்ளி

சினிமா, திரைச் செய்தி
அருவி படம் அற்புதமானதொரு உணர்வைத் தந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கும் சுதந்திரம் ஓர் இயக்குநருக்கு முழுமையாக உண்டு. ஆனால், அதன் ஊடாக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் விதைக்கும் விஷமத்தனம் ஆபத்தானது. அனைத்துமே கற்பனை என்ற டிஸ்க்ளெயிமர் போட்டு விட்டால், ஜீ டிவியின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி தான் டார்கெட் என்ற உண்மையை மறைக்க இயலாது. ஒரு நிகழ்ச்சியைக் கலாய்ப்பது என்பது வேறு, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரைக் கேரக்டர் அசாஸினேட் செய்வது என்பது வேறு. 'Bee டிவியின் 'சொல்வதெல்லாம் சத்தியம்' நிகழ்ச்சித் தொகுப்பாளரான 'ஷோபா பார்த்தசாரதி' முந்தானையை நழுவ விடுவதாகக் காட்சி அமைத்திருப்பார். அது முற்றிலும் கற்பனை தான் என இயக்குநர் சொன்னாலும், இனி ஆகப் போவது ஒன்றுமில்லை. சமூகப் பிரக்ஞையுடைய படமெனப் போற்றப்படும் படைப்பில், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எ...
வெட்டாட்டம் நாவல் – ஒரு பார்வை

வெட்டாட்டம் நாவல் – ஒரு பார்வை

கட்டுரை, புத்தகம்
நாவலின் முதல் அத்தியாத்தைப் படித்து முடித்து இரண்டாம் அத்தியாத்திற்குள் சென்று விட்டால், 266 பக்கங்களையும் வாசித்த பின்பே தான் கீழே வைக்க முடியும். அப்படி ஒரு விறுவிறுப்பான கதை. மிகத் தேர்ந்த கதைசொல்லியாக, சுவாரசியமான நடையில் நாவலைப் படைத்துள்ளார் ஷான் கருப்பசாமி. கதையின் ஜானர் ஒரு பொலிடிக்கல் த்ரில்லர். மக்களின் மனங்களை வசீகரத்த நடிகரான வினோதன் தோல்வியே காணாத முதல்வராகப் பதவியில் வீற்றிருக்கிறார். அவர் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நேரத்தில், ராஜினாமா செய்து முதல்வர் பதவியை மகன் வருணுக்குத் தற்காலிக ஏற்பாடாகத் தாரை வார்த்துக் கொடுக்கிறார். அதில் துளியும் விருப்பமில்லாமல், 'மூன்று வாரம் பல்லைக் கடித்துக் கொள்ளலாம்' என வேண்டாவெறுப்பாகக் கவர்னரைச் சந்தித்து பதவி பிரமாணம் எடுக்கிறான் வருண். வினோதனுக்குப் பாதகமாகத் தீர்ப்பு வருகிறது; தலைநகரத்துக்குக் குடிநீர் தரும் பிரம்மாண்டான ஏரிகளில...
விக்ரம் வேதா – க்ளைமேக்ஸ் புதிர் முடிச்சவிழ்த்தல்

விக்ரம் வேதா – க்ளைமேக்ஸ் புதிர் முடிச்சவிழ்த்தல்

கட்டுரை, சினிமா
சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கலந்துரையாடலில், விக்ரம் வேதா படத்தின் க்ளைமேக்ஸ் பற்றி இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இருவரும் பகிர்ந்து கொண்டது: "மூன்று ஆப்ஷன்களுக்கு வாய்ப்புள்ளன. 1. ஒன்று, வேதா விக்ரமைச் சுடுவது. 2. இரண்டு, விக்ரம் வேதாவைச் சுடுவது. 3. மூன்றாவது, இருவரும் தங்கள் வழியில் பிரிந்து சென்றுவிடுவார்கள். அவர்கள் என்னாவார்கள் என்பதை நாங்க சொல்ல விரும்பவில்லை. அதை ஆடியன்ஸின் பாயின்ட் ஆஃப் வியூவிற்கு விட்டுவிட்டோம்” என்றனர். இனி, இதுதமிழின் புரிதல் என்னவாக இருந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம். வேதாளம் விக்கிரமாதித்யன் கழுத்தைச் சுற்றி கைகளைப் போட்டு, தோளில் தொங்கியவாறு கதைகள் சொல்லும். கதையின் முடிவில் ஒரு கேள்வி கேட்கும். விக்கிரமாதித்யன் புதிருக்குப் பதில் சரியாகச் சொல்லவில்லை எனில், விக்கிரமாதித்யன் தலை வெடித்துவிடும் என சாபமும் கொடுக்கும். தன்னிகரற்ற மன்னரான விக்கிரமாதித்யன...
தரமற்ற படம் தரமணி – ஏன்? எப்படி?

தரமற்ற படம் தரமணி – ஏன்? எப்படி?

சமூகம், சினிமா
தரமணி படத்திற்குத் திரைக்கதை எழுத இன்ஸ்பையரான இரண்டு விஷயங்களைப் பற்றி ராம் பகிர்ந்து கொள்கிறார். << 1. ஜூனியர் விகடனில் வந்த ஒரு கட்டுரை. வெளிநாட்டில் கணவன் வாழ்கிறான்; இங்கே அவன் வீட்டில் ஒரு லேண்ட் லைன் ஃபோன் வாங்குகிறார்கள். செல்ஃபோன் பரவலான உபயோகத்திற்கு வந்திராத சமயம் அது. ஃபோன் பில் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. இவ்விஷயம் பிரச்சனை ஆகிறது. கால் லிஸ்ட் எடுத்துப் பார்க்கப்படுகிறது. ஒரு நம்பருக்கு அதிகமாக அழைப்புப் போய் வந்துள்ளது. "அவன் யாரெனத் தெரியாது. நன்றாகப் பேசினான். நானும் பேசினேன்" என்கிறாள் அம்மனைவி. >> படத்தில் இதைத் தழுவி காட்சிகளை வைத்துள்ளார் ராம். இந்த ஒரு சம்பவத்தைக் கொண்டு பொதுமைப்படுத்துவதே அபத்தமான விஷயம். ராம் ஒரு படி மேலே போய் தன் வக்கிரத்தைக் காட்சிகளாக வைத்துள்ளார். எப்படியெனில், அந்நியோன்யமாக இருப்பதாகத் தொடக்கத்தில் இருந்து காட்டப்படுபவர்கள் வீனஸ் - ...
கருவியாலஜி – சிறுவர் பொக்கிஷம்

கருவியாலஜி – சிறுவர் பொக்கிஷம்

புத்தகம்
"கருவியாலஜி" - பத்து வயதினைக் கடந்த சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய நல்லதொரு புத்தகம். அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும், நாம் சார்ந்திருக்கும் கருவிகளின் கதையைப் பற்றிச் சொல்கிறது புத்தகம். 1958இல் 17 கிலோவாக இருந்த கால்குலேட்டர் எப்படி இன்று பாக்கெட்க்குள் அடங்குமளவு பரிமாண வளர்ச்சி பெற்றது? முதல் கால்குலேட்டரோ மணல் லாரி சைஸில் இருந்துள்ளது. இப்படியாக இரண்டாம் பக்கத்தில் தொடங்கும் சுவாரசியம் கடைசி பக்கம் வரை நீள்கிறது. செல்ஃபோனுக்கும் ஸ்மார்ட் ஃபோனுக்கும் உள்ள வித்தியாசமென்ன? சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பயன்பாடுகளென்ன? புல்லட் ரயில்களின் வேகமென்ன? அவை எவ்வாறு இயங்குகின்றன எனப் பக்கத்திற்குப் பக்கம் தகவல்கள். ஏ.டி.எம்., மைக்ரோ ஓவன், பேஸ் மேக்கர், டச் ஸ்க்ரீன், ரோபோட் என நீளும் பட்டியலில், பென்சில் சீவும் ஷார்ப்னருக்கும் கோட்டா ஒதுக்கியுள்ளார் ஆயிஷா இரா.நடராசன். தொடக்கத்தில் ஒரு மேசை...
எட்டுக் கதவுகளுடைய புதையல் – குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் முறை

எட்டுக் கதவுகளுடைய புதையல் – குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் முறை

மருத்துவம்
ஜூன் 26 அன்று, ட்ரைமெடும் வித்யாசாகர் ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியாவும் இணைந்து, AUTISM – Through the lens of Multiple Intelligence என்ற கவர்ந்திழுக்கும் அற்புதமான தலைப்பில் கருத்தரங்கை நிகழ்த்தினார்கள் (ஆட்டிசம் - விழிப்புணர்வு கருத்தரங்கைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வு இது). ஹாவெர்ட் கார்ட்னர் எனும் அமெரிக்க உளவியலாளர், 1983 இல் ‘பல்திற அறிவாற்றல் (Multiple Intelligence)’ எனும் தியரியை உருவாக்கினார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல திறமைகள் ஒளிந்துள்ளது என்ற பொதுவான கருத்தாக்கம் தான் இந்தத் தியரி எனினும், குழந்தைகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களது திறனை வளர்க்க இத்தியரியைப் பயன்படுத்தலாம். பல்திற அறிவாற்றலை (MI) எட்டாகப் பிரிக்கிறார் ஹாவெர்ட் கார்ட்னர். அவற்றைக் கொண்டு, குழந்தைகளது தனித் திறமையை அடையாளம் கண்டு எப்படி அவர்களது செயல்திறனை ஊக்குவிப்பது எனவும், அப்படி அடையாளம் கண்ட...
கதைகள் சொல்லும் சுண்டைக்காய்

கதைகள் சொல்லும் சுண்டைக்காய்

கட்டுரை, புத்தகம்
ஏழு கடல், ஏழு மலை தாண்டியிருக்கும் வியாசபுரியை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும். அந்நாட்டில், கற்றல் என்பது கதைகளைப் படிப்பது மூலமாக மட்டுந்தானாம். அதாவது பள்ளிகளில் கதைகளை மட்டுமே சிலபஸாக உடைய நாடு அது. வாவ்! அந்நாட்டின் இளவரசன் ஒரு சாபம் காரணமாக சுண்டைக்காயாக மாறி, ஐந்தாம் வகுப்பு படிக்கும் தமிழகத்துச் சிறுவன் சூர்யா கையில் சிக்குகிறான். ‘சுண்டைக்காய் இளவரசன்’ எனும் சிறுவர் நாவலின் கதைக்கரு இதுதான். கதைக்குள் கதையென, சூர்யாவிற்கு இளவரசன் மூன்று மாயாஜாலக் கதைகளைச் சொல்கிறான்.இந்தப் புத்தகத்தை சிறுவர்களுக்கு வாங்கித் தருவதில் ஒரு சின்ன சிக்கலுள்ளது. இளவரசன் அறிமுகமாகித் தன்னைப் பற்றிச் சூர்யாவிடம் சொல்லி முடித்ததும், அவனது நண்பர்கள் “வெடி தேங்காய்” பற்றிச் சொல்லி, அதன் செய்முறையையும் சுவையையும் பற்றிச் சிலாகித்துச் சொல்கிறார்கள். படிக்கும் எவருக்கும் எச்சில் ஊறச் செய்யும். சிறுவர...
கண்ணியமாக உயிர் நீத்தல்

கண்ணியமாக உயிர் நீத்தல்

சமூகம், மருத்துவம்
‘யாருக்கும் தொந்தரவு தராமல், படுத்தப் படுக்கையாக இல்லாமல், எந்த நோய்நொடியும் அண்டாமல் பட்டுன்னு போய்ச் சேர்ந்துடணும்’ என்ற பிரார்த்தனையைச் செவியுறாதவர்களே இருக்கமாட்டோம். அந்தப் பிரார்த்தனையை அடியொட்டிய மருத்துவ விவாதமொன்றினை ட்ரைமெட்டும் நியூரோக்ரிஷும் இணைந்து நடத்தினார்கள். முதியோர் பராமரிப்பைப் பற்றிய TriMed-இன் ‘End of Life Care’ அனுபவத்தை, சம்பந்தப்பட்டவரின் பேத்தியின் ஆடியோவை ஒலிபரப்பி, தங்களது சிகிச்சை முறையை விளக்கினார் மருத்துவர் ஸ்ரீவட்சா. ‘டிக்னிட்டாஸ் (DIGNITAS)’ எனும் நிறுவனத்தைப் பற்றி லண்டன் மருத்துவமனையில் பணி புரியும் நீரஜ் அகர்வால் விளக்கினார். அவர், ‘Oxford Textbook of Neuropsychiatry’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.End of Life Care என்பது, வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் பராமரிப்பு எனப் பொருள் கொள்ளலாம். அந்த ஓய்வு பெற்ற ...
காட்சிப்பிழையும், குருட்டுத் தீர்மானங்களும்

காட்சிப்பிழையும், குருட்டுத் தீர்மானங்களும்

கட்டுரை, சினிமா
தொடர்ந்து ஃபோன் ஒலித்துக் கொண்டே இருந்தது. சிக்னலைத் தாண்டியதும் இடதுபுறம் வண்டியை ஓரங்கட்டிப் பேசினேன். என்னெதிரே ஹெல்மெட் போடாதவர்களை மறித்துக் கொண்டிருந்தார் ட்ராஃபிக் கான்ஸ்டபிள். நான் வண்டியைச் சீராக நகர்த்தியதுமே என்னையும் மறித்தார். ஆவணங்களைச் சரி பார்த்து விட்டு, “உங்களை ஏன் தெரியுமா நிறுத்தினேன்? சிக்னல் விழும் முன்பே, ஃப்ரீ லெஃப்ட் போல் திரும்பிட்டீங்க!” என்றார். நான் கொஞ்சம் திகைத்து, “சார் நான் லெஃப்ட்ல இருந்து வரலை. நேரா வந்தேன். ஃபோன் பேச ஓரமா நிறுத்திட்டு வர்றேன்” என்றேன். லைசென்ஸை என்னிடம் கொடுத்தவாறு, “அவரைப் பாருங்க” என்றார். அவரருகில் போய் நின்றேன். “என்ன கேஸ்?” என்றார். “சார், நான் நேரா வந்தேன். லெஃப்ட்ல இருந்து வந்தேன் எனச் சொல்லி உங்களைப் பார்க்கச் சொன்னார்” என்றேன். “அவரிடம் போய் பேசுங்க” என்றார். மீண்டும் என்னை மடக்கிய கான்ஸ்டபிளிடம் வந்தேன். “என்ன சொன்னார்?” எனக...
இண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க!

இண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க!

கட்டுரை, புத்தகம்
விவசாயத் தொழிலை சிமென்ட் ஆலைகளிடம் காவு கொடுத்துவிட்ட வறண்ட நிலப்பரப்பினைச் சேர்ந்த ஒருவரின் நினைவு மீட்டல்களே இண்ட முள்ளு எனும் சிறுகதைத் தொகுப்பு. ஆனால், கதைகளோ விவசாயம் செழிப்பாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. தனது பால்யத்தில் கேட்டுப் பழகிய அரியலூர் மாவட்டப் பேச்சு வழக்கிலேயே அனைத்து வரிகளையும் எழுதியுள்ளார் அரசன். முதல் வாசிப்பின் பொழுது, அப்பேச்சு மொழி அந்நியமாக இருப்பதால், நம்மருகிலேயே அரசன் அமர்ந்து தனது ஊரைப் பற்றியும் அதன் மனிதர்கள் பற்றியும் அரூபமாய்ப் பேசிக் கொண்டிருக்கும் பிரமை எழுகிறது. ஒரு வாசகனாக கதையின் மாந்தர்களோடு உலாவ சற்றே சிரமமாக உள்ளது. வழி தவறிய சாந்தியின் பின்னால் போய், ‘என்ன? ஏது?’ என்று விசாரிக்கலாம் எனப் பார்த்தால், அரசன் நம் கையைப் பிடித்து இழுத்து, “அவங்க தான் சாந்தி. அவங்க வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு” என விடாமல் கதை சொல்கிறார். தொகுப்பில் மொத்தம் ஒன்பது சிறுக...