தி டேனிஷ் கேர்ள் விமர்சனம்
The Danish girl (A)
உருவப்பட ஓவியரான கெர்டா, தன் கணவரான எய்னரிடம் பெண்களின் உடை அணிந்து மாடலாக நிற்கச் சொல்கிறார். தன் மனைவிக்கு உதவ பெண்களின் உடையை அணியும் எய்னர், தன்னைப் பெண்ணாக உணரத் தொடங்குகிறார். பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை.
2000 ஆவது ஆண்டு, எய்னரின் வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாகக் கொண்டு டேவிட் எபர்ஷோஃப் எழுதிய ‘தி டேனிஷ் கேர்ள்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்ட படமிது. புனைவு கலக்கப்பட்ட அவரது நாவல் அழகானதொரு காதலை முன்னிறுத்துகிறது. அக்காதலை, படம் நெடுகே பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது லுசிண்டாவின் திரைக்கதை.
காதலித்து மணந்து கொண்ட கணவன், ஆறு வருடங்களாக அன்பும் நேசமும் இயைந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, ‘நானொரு பெண்ணாக என்னை உணர்கிறேன்’ என்று சொன்னால் அந்த மனைவியின் மனநிலை எப்படி இருக்கும்? கெர்டாவாக அலிசியா விகேண்டர் அசத்தியுள்ளார். தன் கணவன...