
ராபர் விமர்சனம் | Robber review
‘மெட்ரோ’ பட இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணனின் கதையை, அவரது உதவியாளர் SM பாண்டி இயக்கியுள்ளார். மெட்ரோ படத்தைப் போலவே, இப்படமும் செயின் ஸ்னேட்சிங்கை மையப்படுத்திய படம்.
‘திருடன் முகத்தை மூடிக் கொண்டு வருவான். திருடிக் கொண்டு போய் விடுவான். ஆனால், ராபர் என்பவன் நின்று பயத்தைக் காட்டித் துன்பறுத்தி நகையைத் திருடிச் செல்வான். இது தான் திருடனுக்கும் ராபருக்கும் உள்ள வேறுபாடு. மெட்ரோ திருடனுடைய கதை, இது ராபருடைய கதை’ என படத்தின் கதாசிரியரான ஆனந்த் கிருஷ்ணன், ராபர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டிருந்தார்.
பெண்களை ஆசைக்கு இணங்க வைக்கப் பணம் தேவை என்கிற கருத்தாக்கத்திற்குச் செல்லும் படத்தின் எதிர் நாயகனான சத்யா, பெண்ணின் கழுத்தில் இருந்து நகையைக் கொடூரமாகப் பறிக்கத் தொடங்குகிறான். எங்கெல்லாம் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லையோ, பொருத்தப்பட்டாலும் வேலை செய்யாத இடங்களாகப் பார்த்துக் கொள்ளை...