
திறந்திடு சீசே விமர்சனம்
தனக்குள் இருக்கும் பூதத்தை, ‘திறந்திடு சீசே’ என பாட்டிலை ஓப்பன் செய்து விழிக்க வைத்துவிடுகிறான் மனிதன். அப்படி ஒருவனுக்குள் விழித்துக் கொள்ளும் பூதத்தால், அவனைச் சுற்றியிருப்பவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகின்றனர் என்பதை மிகத் தெளிவாகச் சித்தரிக்கிறது படம்.
பப்-க்கு (Pub) வரும் சார்மி, பாத்ரூமில் வைத்து வன்புணர்வு செய்யப்படுகிறார். போதையில் இருந்த அவருக்கு வன்புணர்ந்தது யாரெனத் தெரியவில்லை. ஆனால், பார் அட்டெண்டர்களான ஜான் மற்றும் ஹூசைன் இருவரில் ஒருவர்தான் என உறுதியாகத் தெரிகிறது. யார் வன்புணர்ந்ததென சார்மி கண்டுபிடிப்பதுதான் படத்தின் முடிவு.
ஹூசைனாக நடித்திருக்கும் நாராயணன் கலக்கியுள்ளார். படம், ஓரிரவு ஒரு பப்-க்குள் நடக்கும்படியான கதையைக் கொண்டது. ஆனால், ஒரே லோக்கேஷன் என்ற அலுப்புத் தெரியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இவரது நடிப்புத்தான். எல்லையை மீற விருப்பம் கொண்ட, ஆனாலும் அதற்கான போத...