Shadow

Tag: திவ்யா துரைசாமி

வாழை விமர்சனம்

வாழை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாழைத்தோட்டத்தில் வாழைத்தார்களை சுமை தூக்கப் போகும் சிறுவனின் பார்வையினின்று படம் பயணிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இப்படத்தில் தன் பால்யத்தைத் திரைச்சித்திரமாக்கியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த தன்வரலாற்றுப் படத்தை, நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஐந்து நாட்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தான்க்கும், அவனது தோழன் சேகருக்கும், வாரயிறுதி என்றாலே எட்டிக்காயைக் கசக்கிறது. காய் சுமத்தல் எனும் வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர் அம்மாக்கள். ஒரு பகல் முழுவதும், வாழைத்தோட்டத்தில் இருந்து வாழைத்தார்களைச் சுமந்து, கால்வாய்கள் அடங்கிய வழுக்கும் வரப்பின் வழியாக லாரியில் கொண்டு போய் ஏற்றவேண்டும். பாரத்தால் கழுத்து ஒரு பக்கம் சாய்ந்தவண்ணமே இருக்கும் அச்சிறுவர்களுக்கு. அந்த சிறுவர்களின்...
Blue Star விமர்சனம்

Blue Star விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மற்றுமொரு ஆடுகளத்தின் கதை.  ஊரில் இரண்டு கிரிக்கெட் அணிகள். அவர்களிடையே ஜாதி ரீதியிலான பிளவு. இரண்டு அணிகளும் முட்டிக் கொண்டும் முறைத்துக் கொண்டும் திரிய, வர்க்கம் அவர்கள் இருவரையுமே இன்னும் கீழாகத்தான் பார்க்கிறது என்கின்ற உண்மை ஒரு கட்டத்தில் முகத்தில் அறைய, இரு அணிகளும் கைகோர்த்து வர்க்கத்தை ஜெயிப்பதே இந்த “ப்ளூ ஸ்டார்” படத்தின் கதை. படத்தின் துவக்கம் மிக மெதுவாகச் செல்கிறது. கதையற்ற காட்சிகளின் கோர்வையாக மட்டுமே கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் வரை நீடிக்கும் படம், காலணி அணியினருக்கும், ஊர்க்கார அணியினருக்குமான 3 பால் மேட்சில் தான் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது.  அதற்குப் பின்னர் விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் விதிகளுக்கு உட்பட்டு நகரும் திரைக்கதை, விளையாட்டுக்கே உண்டான சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்வதால் திரைப்படம் பரபரப்பாகச் செல்கிறது.  க்ளைமாக்ஸ் காட்சியில் பி...
”திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்

”திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
நீலம் புரொடெக்ஷன்ஸ்  சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித்  மற்றும்  லெமன் லீப் கிரியேஷன்ஸ்  சார்பாக  ஆர்.கணேஷ் மூர்த்தி  மற்றும்  ஜி.சவுந்தர்யா ஆகியோர்  இணைந்து  தயாரித்திருக்கும்  திரைப்படம்  ப்ளூ ஸ்டார்.  அசோக் செல்வன்,  சாந்தனு,  கீர்த்தி பாண்டியன்,  ப்ருத்வி,  பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல்,  லிசி ஆண்டனி,  திவ்யா துரைசாமி,  அருண் பாலாஜி மற்றும்  பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.  இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பல முக்கிய சினிமா கலைஞர்கள், பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். படத்தின் நாயகியான கீர்த்திப் பாண்டியன்  பேசும் போது, இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது.  அமர்...
ஃபிங்கர்டிப் சீசன் 2 – விரல்நுனி ஆபத்து

ஃபிங்கர்டிப் சீசன் 2 – விரல்நுனி ஆபத்து

சினிமா, திரைத் துளி
ஜீ5 தளம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் பிரீமியர் செய்யவுள்ள அடுத்த படைப்பான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2 தொடரின்  செய்தியாளர் சந்திப்பானது படக்குழுவினர் கலந்து கொள்ள இனிதே  நடைபெற்றது. ‘ஃபிங்கர்டிப் சீசன் 2’ தொடரை அருண் குமார் மற்றும் ஜார்ஜ் C. வில்லியம்ஸ் தயாரிக்க,சிவாகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை  வேடங்களில் நடிக்க, மாரிமுத்து, வினோத் கிஷன், கண்ணா ரவி, ஷரத் ரவி, திவ்யா துரைசாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 17, 2022 அன்று ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 வெளியாவதை ஒட்டி இந்தத் தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினர், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். ஜீ5 கிளஸ்டரின் ஹெட்டான சிஜு பிரபாகரன், "சமூக வலைதளம் மற்றும் அதன் ஆபத்தைப் பற்றி எடுக்கும் தொடர்கள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும்...