தி கான்ஜூரிங் 2 விமர்சனம்
'தி கான்ஜூரிங்’ என்றால் இந்திரஜாலம் அல்லது அமானுஷ்யச் சம்பவங்கள் எனப் பொருள் கொள்ளலாம். இப்படத்திற்கு இரண்டாவது பொருளே பொருந்தும்.
தூங்கிக் கொண்டிருக்கும் 11 வயது சிறுமியான ஜேனட், விழிக்கும் பொழுது கீழ்த் தளத்தில் இருக்கிறாள்; அந்தரத்தில் மிதக்கிறாள்; 72 வயது முதியவரின் குரலில் பேசுகிறாள். அவள் ஆவியால் பீடிக்கப்பட்டது உண்மைத்தானா அல்லது அந்தச் சிறுமியின் குடும்பம் நாடகமாடுகிறதா என அறிய, அமெரிக்கத் திருச்சபை எட் – லோரைன் தம்பதியை இங்கிலாந்து செல்லுமாறு பனிக்கிறது. பின் என்னாகிறது என்பதுதான் கதை.
பேய்ப் படம் என்பதை மீறி படம் சில இடங்களில் மிக அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. “நான் ரொம்ப சோர்ந்துட்டேன். என்னை யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க” என ஆவியால் பீடிக்கப்படும் 11 வயது பெண் நம்பிக்கையிழந்து சொல்கிறாள். எல்லாவற்றையும் பக்கத்திலேயே இருந்து பார்க்கும் அவளது அக்கா மார்க்ரெட் கூட, “நீ தான...