Shadow

Tag: தீபா ஷங்கர்

டீஸர் மற்றும் ட்ரைலரை ஒரே நேரத்தில் வெளியிட்டு அசத்திய “ஒரு நொடி” படக்குழு

டீஸர் மற்றும் ட்ரைலரை ஒரே நேரத்தில் வெளியிட்டு அசத்திய “ஒரு நொடி” படக்குழு

சினிமா, திரைத் துளி
அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டீசர் சரிகமா மியூசிக் நிறுவனத்தால் இன்று YouTube வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின் ட்ரைலரும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ரசிகர்களை இரண்டு விதங்களில் ஒருசேர கவர முடியும் என்பதே நோக்கம் ஆகும். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம...
தமன்குமார் நாயகனாக நடிக்கும் “ஒரு நொடி”

தமன்குமார் நாயகனாக நடிக்கும் “ஒரு நொடி”

இது புதிது, திரைச் செய்தி
அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை அசுரனும் திரைப்பட நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் புரடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘ஒரு நொடி’ படத்தில் ‘தொட்டால் தொடரும்’ பட நாயகனும் ‘அயோத்தி’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் முற்றிலும் புதிய பாத்திரம் ஒன்றில் நாயகனாக நடிக்க, அவருடன் எம் எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், சிவரஞ்சனி ஆகியோரும் முக்கி...
தெய்வ மச்சான் விமர்சனம்

தெய்வ மச்சான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தபால் கார்த்திக்கின் கனவில், வெள்ளைக் குதிரையுடன் ஒருவர் வந்து யாராவது இறந்து விடுவார்கள் எனச் சொன்னால் அது பலித்துவிடும். அவனது தங்கை குங்குமத்தேனுக்கு, பல சம்பந்தங்கள் தள்ளிப் போய், ஒரு நல்ல வரன் அமைகிறது. ஆனால், கல்யாணம் ஆன இரண்டு நாளில் கார்த்தியின் மச்சான் அழகர் என கனவு வர, தன் மச்சானின் உயிரை எப்படியாவது காப்பாற்ற நினைக்கிறான் கார்த்திக். கனவில் கண்டது நடந்ததா, இல்லை கார்த்திக்கால் தன் மச்சான் அழகரைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தின் தொடக்கப்புள்ளி, விலங்கு இணைய தொடரின் படப்பிடிப்பில் போடப்பட்டதால், பாலசரவணனையும், கிச்சா ரவியையும் படத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். பாலசரவணன் ஓரளவு படத்தின் கலகலப்பிற்கு உதவினாலும், திரைக்கதை ஒத்துழைக்காததால் விழலுக்கு இறைத்த நீராகிவிடுகிறார். கிச்சா ரவியும் கைவிட, அவரது மனைவியாக நடித்துள்ள தீபா சங்கர் மட்டும் தன் அதீத நடிப்...
“ஓவர் ஆக்டிங்கைக் குறைத்துக் கொள்கிறேன்” – ‘தெய்வ மச்சான்’ தீபா ஷங்கர்

“ஓவர் ஆக்டிங்கைக் குறைத்துக் கொள்கிறேன்” – ‘தெய்வ மச்சான்’ தீபா ஷங்கர்

சினிமா, திரைச் செய்தி
உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் 'ஆடுகளம்' நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்குப் பின்னணி இசை அஜீஸ் கவனித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தி...
சொப்பன சுந்தரி விமர்சனம்

சொப்பன சுந்தரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். பிறரது பொருளுக்கு ஆசைப்பட்டால் துன்பம் வந்து சேரும் என்பதுதான் படத்தின் ஒரு வரிக்கதை. அதை டார்க் காமெடியாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் SG சார்லஸ். சிவப்பு நிறக் கார் என்றால் சொப்பன சுந்தரியும், சொப்பன சுந்தரி என்றால் சிவப்பு நிறக் காரும் ஞாபகத்திற்கு வருமளவு, கரகாட்டக்காரனில் வரும் அந்த நகைச்சுவைக் காட்சி அவ்வளவு பிரபலம். இப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள சிவப்பு நிறக் கார் வருவதால், படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ எனப் பெயரிட்டுள்ளார் இயக்குநர் SG சார்லஸ். இவர், இயக்குநர் மோகன் ராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முதற்படமான ‘லாக்கப்’பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகைமையில் இப்படத்தை எடுத்துள்ளார். வறுமையில் தவிக்கும் அகல்யாவிற்கு ஒரு சிவப்பு நிறக் கார் ஒன...