Shadow

Tag: தீபிகா படுகோன்

‘கல்கி 2898 AD’ திரைப்படத்தில் பைரவாக நடிக்கும் பிரபாஸ்

‘கல்கி 2898 AD’ திரைப்படத்தில் பைரவாக நடிக்கும் பிரபாஸ்

சினிமா, திரைச் செய்தி
மகா சிவராத்திரியின் மங்களகரமான நிகழ்வினைக் கொண்டாடும் வகையில், முன்னணி படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும் ‘கல்கி 2898 A.D’ படத்திலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட் ஒன்றை, தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களின் வழியே, தயாரிப்பாளர்கள், சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து, முன்னணி நடிகர் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயரை அறிவித்துள்ளனர். ‘கல்கி 2898 A.D.’ படத்தில் 'பைரவா' என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். ‘பைரவா’வை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, படக்குழுவினர் அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!. படத்திலிருந்து வெளியான அற்புதமான அப்டேட், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபாஸ் ரசிகர்கள் இணையம் முழுக்க இந்த செய்தியினைப் பகிர்ந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இ...
ஜவான்- விமர்சனம்

ஜவான்- விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் கமர்ஸியல் இயக்குநர்களின் திரைப்படங்கள் இவைகளில் நாம் கேட்கக்கூடாத கேள்வி கதை என்ன என்பது.  ஏனென்றால் பெரும்பாலும் அது ஒரே கதை தான்.  நல்வழியில் செல்லும் நாயகனின் வாழ்க்கையை தீய வழியில் செல்லும் வில்லன் சிதைப்பான். ஹீரோ மீண்டு வந்து பழிவாங்குவார்.  சில சமயங்களில் ஹீரோ பழிவாங்கத் தவறினால் அவரின் மகன் வந்து பழி வாங்குவார்.  இதன் வகையறாக்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து பழி வாங்குவது, அப்பாவிற்காக மகன் பழி வாங்குவது, மகனுக்காக அப்பா பழி வாங்குவது என உலக சினிமா வரலாறு தொடங்கியதில் இருந்து இது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.  உதாரணத்திற்கு நம் இயக்குநர் அட்லியின் படங்களில் முதல் படமான ‘ராஜா ராணி’யை மட்டும் விட்டுவிட்டு பிற படங்களைப் பாருங்கள்.’தெறி’ தன் குடும்பத்தை சிதைத்தவனைப் பழி வாங்கும் ஹீரோ. “மெர்சல்’  தன் அப்பா அம்மாவை கொன்றவனை பழி வாங்கும் மகன்(கள்...
‘ஜவான்’ படத்தில் சாதனை படைத்த  ‘ஹையோடா’  பாடல்

‘ஜவான்’ படத்தில் சாதனை படைத்த  ‘ஹையோடா’  பாடல்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
அன்பு  அனைத்தையும்  வெல்லும்!  என்கின்ற வாசகத்துக்கு ஏற்ப, ஜவானில் இடம்பெற்ற காதல் பாடலான  'ஹையோடா'  என  தமிழிலும் ,  'சலேயா'  என  இந்தியிலும், 'சலோனா'  என தெலுங்கிலும்  தொடங்கும்  பாடல்  வெளியாகி,  தமிழ், தெலுங்கு,  இந்தி  என  மூன்று  மொழிகளிலும்,  யூட்யூபில்  35  மில்லியனுக்கும் மேற்பட்ட  பார்வைகளை பெற்றுள்ளது.யூட்யூபில்  24 மணி  நேரத்தில்  உலகளவில்  அதிக  நபர்களால் பார்வையிடப்பட்ட  வீடியோவாகவும்  சாதனை  படைத்திருக்கிறது.யூட்யூப்  மற்றும்  யூட்யூப்  மியூசிக்  தர  வரிசையில்  'ஹையோடா' முதலிடத்தில்  ட்ரெண்டிங்கில்  உள்ளது.தமிழில்  'ஹையோடா' . இந்தியில் 'சலேயா'..,  தெலுங்கில் 'சலோனா'..,  எனத் தொடங்கும்  ஷாருக்கானின்  காதல்  பாடல்,  உண்மையிலேயே  ரசிகர்களுக்கு  சிறப்பான  விருந்தாகும்.  அழகான  நயன்தாரா  மற்றும் ஷாருக்கான்  உடனான  அவர்களது  கெமிஸ்ட்ரி  பார்வையாளர்களால் பாராட்டப்பட...
“ஜவான்”-னில்  “ஹைய்யோடா”என ரொமான்ஷ் செய்யும் விண்டேஜ் ஷாருக்

“ஜவான்”-னில்  “ஹைய்யோடா”என ரொமான்ஷ் செய்யும் விண்டேஜ் ஷாருக்

சினிமா, திரைச் செய்தி
மியூசிக்கல் மேஸ்ட்ரோ இசையமைப்பாளர் அனிருத் இசையில், அனிருத் & ப்ரியா மாலியின் குரலில்,  'ஹைய்யோடா'  பாடல் மனமெங்கும் மகிழ்ச்சியை  தூண்டும் மேஜிக்கை செய்கிறது.  இந்தப் பாடல் ஷாருக்கானின் காலத்தால் அழியாத ரொமான்ஸ் பக்கங்களை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது..  இதயத்தை வருடும் மெல்லிசையும், காதல் பொங்கி வழியும் ஷாருக்கும் சேர்ந்த கலவையாக  இந்தப் பாடல்  ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்குள் பெரு விருந்தாக அமைந்துள்ளது.நடிகர் ஷாருக்கானும்  நயன்தாராவும்  முதன்முறையாக  இப்பாடலில்  ஜோடி சேர்ந்துள்ளனர்.  இந்தியாவின் முன்னணி நடன இயக்குநர்  ஃபரா கானின் அற்புத நடன அமைப்பில், மிகவும் பிரபலமான பாடலாசிரியர் விவேக் எழுதிய இதயப்பூர்வமான பாடல் வரிகளில்,  ஒரு அற்புதமான பாடலாக இப்பாடல் வெளிவந்துள்ளது.ஷாருக்கானின் ரொமான்ஸ் நடிப்பிற்கு அனிருத் மிக அழகான பொருத்தமாக குரல் தர நயன்தாராவின் நேர்த்தியான தேனொ...
“ஹைய்யோடா” பாடலுக்கான டீசர் வெளியீடு

“ஹைய்யோடா” பாடலுக்கான டீசர் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
ஜவான்” படத்தின்  மீதான  எதிர்பார்ப்பு  உச்சம்  தொட்டிருக்கும்  இந்த வேளையில் “வந்த இடம்” பாடல்,  விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவின் தோற்றத்துடன் கூடிய போஸ்டர் வெளியீடு, #AskSRK நிகழ்வு, SRK UNIVERSEன் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் 52 நகரங்களில் வெளியிடல் கொண்டாட்டம் , வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிட்டது ஆகியவற்றின் மூலம் “ஜவான்” படத்தை லைம் லைட்டிலேயே வைத்திருக்கும் படக்குழுவினர் தற்போது அடுத்த அஸ்திரத்துடன் வந்துள்ளனர்.Ask SRK நிகழ்வின் போது ஷாருக்கானிடம் ‘ஜவான்’ படத்தில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது என்று கேள்வி எழுப்பிய போது அவர் “ஹைய்யோடா” என்னும் ரொமாண்டிக் பாடல் தான் இப்படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக அமைந்துள்ளது என்று பதிலளித்திருந்தார். அப்பொழுது  இருந்தே அப்பாடல் மீதான ஃபீவர் ரசிகர்களுக்கு தொற்றிக் கொண்டது.தற்போது  “ஹைய்யோடா” பாடலின் டீசரை வெளியிட்ட...
‘வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ  வந்தது.

‘வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ  வந்தது.

சினிமா, திரைச் செய்தி
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரிகான் தயாரித்திருக்கும் திரைப்படம் “ஜவான்”.  வரும் செப்டம்பர் 7ம் தேதி அன்று இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி  ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.  இதனையடுத்து திரைப்படம் தொடர்பாக விளம்பரப்படுத்துதலில் இறங்கி இருக்கும் தயாரிப்புக் குழுவினர் திரைப்படம் தொடர்பான ஒவ்வொரு விசயங்களாக வெளிவிட்டு, “ஜவான்” திரைப்படத்தினை என்றென்றைக்குமான பேசு பொருளாக மாற்றி வருகின்றனர் என்றே சொல்லலாம்.முதலில் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது,  முன்னோட்ட வீடியோ யூ டியூப்பில் சாதனையை சத்தமில்லாமல் படைக்க, அதே சூட்டோடு தமிழில் “வந்த இடம்” என்று தொடங்கும் பாடலை வெளியிட்டனர்.  சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் கிட் அடித்ததை நினைவில் கொண்டு, வந்த இடம் பாடலிலும் லுங்கி அணிந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன கல...
#AskSRK!   “ஜவான்”தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக்

#AskSRK!   “ஜவான்”தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக்

சினிமா, திரைத் துளி
ஷாருக்கானின்  நடிப்பில்  வெளியாகவிருக்கும், ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு, பார்வையாளர்களிடையே  தொடர்ந்து  அதிகரித்து  வருகிறது. அதற்கான  ஆதாரமாக   சமீபத்திய  #AskSRK அமர்வு,  இணையம்  முழுக்க வைரலாகி வருகிறது.  ஷாருக்கான்  தனது  ரசிகர்களுடன் #AskSRK   எனும் ஹேஸ்டேக்கில்,  ட்விட்டரில்  தொடர்பு கொள்வதால்,  அவருடன்   ரசிகர்கள் உரையாடுவது,  உண்மையில்  ஒரு  பெரிய  விருந்தாக  அமைந்துள்ளது. மேலும்  முன்னெப்போதும்  இல்லாத  அளவு  ஷாருக்கானின்  ஜவான் திரைப்பட எதிர்பார்ப்பு  உச்சகட்டத்தை  எட்டியுள்ளது.  ஷாருக்கானிடம் படத்தின்  கதையைக்  கேட்பது  முதல்,  அவரது  கதாபாத்திரம்  குறித்து கேட்பது  வரை,  நெட்டிசன்கள்  சமூக  வலைதளங்களில்  படம்  குறித்த தங்கள்  ஆர்வத்தை  வெளிப்படுத்தி  வருகின்றனர். #AskSRK  டிவிட்டர்  அமர்வில்  SRK  தனது ரசிகர்களுக்கு பதிலளிக்கத் தொடங்கியவுடன்,  ...