கர்ணன் சிறந்த நண்பனா?
கர்ணன் கொடையாளியா?
மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிக்க
அற்று விழுந்த அருமணிகள் - மற்றவற்றைக்
கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க் கென்னாருயிரைப்
போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு
என்று பாரத வெண்பாவில் வருகிறது. இது பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் எழுதிய நூல்.
வில்லி புத்தூராரும்,
'மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ?
கோக்கவோ?'" என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,
தருமமும்!' என்றான்.
என எழுதியுள்ளார். இதில் யார் முதல் என்று தெரியவில்லை.
அதாவது துரியோதனன் மனைவி கர்ணனுடன் சொக்கட்டான் விளையாடுகிறாள். அப்போது துரியோதனன் உள்ளே வருகிறான். அவன் வருவது கர்ணனின் பின் பக்கம், அவள் பார்த்து எழுந்துவிட, கர்ணன் தோல்வியி...