Tag: துருவங்கள் 16

இரவின் கனவாக – துருவங்கள் 16!
‘துருவங்கள் பதினாறு’ எனும் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். 21 வயது இளைஞரான இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். சினிமா ஆர்வத்தில் படிப்பை பாதியில் நிறுத்தியவர். குறும்படங்கள் எடுத்து சினிமா பக்கம் வந்திருப்பவர். ஏற்கெனவே 'விழியின் சுவடுகள்', 'நிறங்கள் மூன்று', 'ஊமைக்குரல்', 'பிரதி' என 4 குறும்படங்கள் இயக்கிப் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றபின் சினிமா மீது நம்பிக்கை வைத்துத் திரைக்களத்துக்கு வந்து விட்டார்.
ஆபாச காமெடி இல்லை; ஆவேச பஞ்ச் வசனங்கள் இல்லை ; பாடல்கள் இல்லை; கதாநாயகி இல்லை; காதல் இல்லை; இப்படி வழக்கமான எதுவும் இல்லை. பரபரப்பான கதை உண்டு விறுவிறுப்பான காட்சிகள் மட்டுமே உண்டு.
'துருவங்கள் பதினாறு' படத்தில் பல புதுமுகங்கள் பங்கு வகிக்கிறார்கள். பிரதான வேடமேற்றிருப்பவர் நடிகர் ரகுமான். கிளை வேர்களாக பலரும் இருக்க ஆணிவேராக ரகுமான் பாத்திரம் இருக்கிறது.
இது ஒரு க்ரைம் ...