Shadow

Tag: துருவா

சேரன் நடித்த ‘தமிழ்க் குடிமகன்’  திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

சேரன் நடித்த ‘தமிழ்க் குடிமகன்’  திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
லட்சுமி  கிரியேஷன்ஸ்  தயாரிப்பில்  உருவாகியுள்ள  திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்.  இயக்குநர் சேரன் கதாநாயகனாக  நடித்துள்ள இந்த படத்தை  'பெட்டிக்கடை' , 'பகிரி'  ஆகிய படங்களை  இயக்கிய  இசக்கி கார்வண்ணன்  இயக்கியுள்ளார்.   முக்கிய  வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி,  துருவா, 'மிக மிக அவசரம்'  புகழ்  ஸ்ரீபிரியங்கா,  தீபிக்ஷா,  அருள்தாஸ்,  ரவிமரியா மற்றும் பலர்  நடித்துள்ளனர்.  இந்தப்  படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.  ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை  கார்த்திக்  மேற்கொண்டுள்ளார்.  ‘தமிழ்க் குடிமகன்’ திரைப்படத்தின்  இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக‌ பிரபலங்கள்  முன்னிலையில்  சென்னையில்  இன்று  நடைபெற்றது. நிகழ்ச்சியின்  முக்கிய அம்சங்கள் வருமாறு:   படத்தின் இயக்குந‌ர் இசக்கி கார்வண்ணன் பேசியதாவது... ...
ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் ‘மார்டின்’

ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் ‘மார்டின்’

சினிமா, திரைத் துளி
வாசவி என்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா நடிப்பில், பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது 'மார்டின்' திரைப்படம். இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குநர் AP அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரம்மாண்டத்தையும், துருவா ச...
சூப்பர் டூப்பர் திரைப்படம்

சூப்பர் டூப்பர் திரைப்படம்

சினிமா, திரை விமர்சனம்
சூப்பர் என்பது விலை மதிப்புமிக்க போதைப் பொருள் ஒன்றின் பெயர். டூப்பர் என்பது, ஏமாற்றுக்காரனான தன்னைத் தானே நாயகன் அழைத்துக் கொள்ளும் ஒரு பட்டப்பெயர். நிழலுலகத்து மைக்கேலிற்குச் சொந்தமான சூப்பர், டூப்பரிடம் சிக்கிக் கொள்கிறது. மைக்கேல் சூப்பருக்காக டூப்பரைத் துரத்த, டூப்பர் மைக்கேலிடம் இருந்து தப்பித்து, பின் சூப்பர் டூப்பர் அவதாரமெடுத்து, மைக்கேலைத் தன் வழியிலிருந்து அகற்றுவதுதான் படத்தின் கதை. கோமாளி படத்தில் மனநல மருத்துவராக நடித்திருக்கும் சாரா, இப்படத்தில் இரட்டை வேடத்தில் வருகிறார். நாயகனின் மாமாவாக மீசை வைத்தும், ஐபிஎஸ் விக்ரமாக மீசை இல்லாமலும் வருகிறார். ஷிவா ஷா ரா எனத் திரையில் அவரது பெயரும் நீளம் பெற்றுள்ளது. பேசியே கொல்கிறார், ஆனால் நகைச்சுவைக்குக் கொஞ்சமும் உதவவில்லை. இந்தப் படத்தில் இவர் ஏன் இரண்டு பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள அடுத்த பாகத்திற்குக் காத்த...
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ என்ற தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் பாட்டு, ஒரு அழகான காதல் பாடல். அந்தப் பாடலின் தொடக்கத்தைத் தலைப்பாக வைத்திருக்கும் இப்படமோ, ‘செயின் ஸ்னாட்சிங்’ பற்றிய படம். சுலபமாய் உருக்கிவிடக்கூடிய தங்கம் தான், மறைந்திருந்து பெண்களின் கழுத்தை மர்ம கும்பல் நோட்டமிடக் காரணம். பெண்களின் செயினை அறுப்பது வெறும் கொள்ளைக் குற்றம் மட்டுமில்லை, அது அட்டெம்ப்டட் மர்டரில் வரும் என்பதைப் படம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. நகை அணிந்து கொண்டு, இரவில் ஒரு பெண் தனியாக, என்று நடக்கிறாளோ அன்று தான் உண்மையாகச் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் எனக் காந்தி சொன்னதை மாற்றி, என்று ஒரு பெண் பகலில் தைரியமாக நகையணிந்து நடக்க ஆரம்பிக்கிறளோ, அன்று தான் சுதந்திரம் எனப் படத்தின் இறுதியில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளார் இயக்குநர். பெண்களின் தங்கச்சங்கிலியை அறுக்கும் கும்பலிடம் இருந்து சங்கிலியைப...
காதல் கசக்குதய்யா விமர்சனம்

காதல் கசக்குதய்யா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதலைச் சித்தரிக்கும் படங்கள், குறிப்பாக பதின் பருவத்துப் பெண்ணின் முதிர்ச்சியற்ற துணிகரமான காதலைச் சொல்ல முற்படுகையில், கதாநாயகியைக் கவர்ச்சியாகக் காட்டி ஒப்பேத்துவார்கள். ஆனால், குறும்பட இயக்குநரான துவாரக் ராஜா அந்தளவுக்குச் செல்லவில்லை. பள்ளிக்குச் செல்லும் பதின் பருவ மாணவிக்கு, இருபதுகளின் மத்தியில் இருக்கும் நாயகனின் மீது ஈர்ப்பு. பார்வையாளர்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாத வகையில் காட்சிகள் அமைத்ததற்காகவே அறிமுக இயக்குநரைப் பாராட்டலாம். அர்ஜூனாக துருவா நடித்துள்ளார். படம் முழுவதுமே தானேற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். கோமாவிலுள்ள தன் தாயின் பரிதாப நிலையை எண்ணி உடையும் பொழுது, அவரது நடிப்புக் கவனிக்க வைப்பதாக உள்ளது. பதின் பருவ காதலியுடனான ஊடலின் பொழுதும், உள்ளுக்குள் அமைதியாக மருகும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். ஆனால், படம் நெடுகேவும் நாயகனைச் ‘செயின் ஸ்மோக்’கராகக் கா...