Shadow

Tag: துரை சுதாகர்

நந்தன் | மண்ணின் வேதனையைப் பதிவு செய்த சினிமா

நந்தன் | மண்ணின் வேதனையைப் பதிவு செய்த சினிமா

சினிமா, திரைச் செய்தி
இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் - இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜை இந்தப் படத்திற்காக யோசித்து வைத்திருந்தார் இயக்குநர் இரா. சரவணன். அவரில்லாத பட்சத்தில், அவருக்கு நிகரான ஒருவர் வேண்டுமென ஒளிப்பதிவாளர் சரணை அணுகியுள்ளார் இயக்குநர். ஒளிப்பதிவாளர் சரண், " 'கிடாயின் கருணை மனு', 'விழித்திரு' திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பபை அளித்தார். அவருக்கு என் நன்றிகள். ...
களவாணி 2 விமர்சனம்

களவாணி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. இப்படத்திற்கு, முதல் பாகத்துடன் நேரடி தொடர்பு இல்லை. முக்கிய கதாபாத்திரங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். அரசனூரில், களவாணி எனப் பெயர் பெற்ற அறிக்கி எனும் அறிவழகனை, மகேஸ்வரி காதலிக்கிறார். காதலிக்காக உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊர் பிரஸிடென்ட் ஆகவேண்டுமென முடிவெடுக்கிறார் அறிக்கி. களவாணி எனப் பெயர் பெற்ற அவர் தேர்தலில் எப்படி வென்றார் என்பதைக் கலகலப்பாகச் சொல்லியுள்ளார் சற்குணம். மடந்தையான மகேஸ்வரிக்கும், களவாணி அறிக்குக்கும் ஆன காதல், முதற்பாகத்தில் அற்புதமானதொரு உணர்வைத் தரும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். நாயகன், நாயகிக்குள்ளான ஈ...
தப்பாட்டம் விமர்சனம்

தப்பாட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தப் படத்தின் நாயகன், 'பப்ளிக் ஸ்டார்' துரை சுதாகர் எனும் அறிமுக நாயகன் ஆவார். தப்பாட்டம் ஆடுபவராக நடித்துள்ளார். வாழ்க்கையைத் தப்பாக ஆடினால் தோற்று விடுவோம் என்றும் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். படத்தின் காலமும் கதையும் 1984 இல் நிகழ்வதாகப் படம் தொடங்கும் பொழுதே சொல்லப்படுகிறது. கதாபாத்திரங்கள் அனைவரும் சாராயக்கடையே கதியென்ன உள்ளார்கள். வேறு வேலையின்றிக் குடித்து விட்டு சலம்புவதுதான் நாயகனுக்கும், அவன் கூட்டாளிகளுக்கும் வேலை என்று முதற்பாதி முழுவதும் காட்டுகிறார் இயக்குநர் முஜிபூர் ரஹ்மான். தப்பாட்டத்தின் சிறப்பை வசனமாகக் கூட எங்கேயும் பதியாதது உறுத்துகிறது. நாயகனின் மாமாவாக இயக்குநரும் வேடம் ஏற்று நடித்துள்ளார். அவர் சாப்பிட்டு விட்டு பீடியைப் புகைக்க நினைக்கும் பொழுதெல்லாம், குடிக்காரர்கள் யாரேனும் வந்து அவரைத் தொந்தரவு செய்கிறார்கள் எனக் கதைக்குத் தேவையில்லாக் காட்சிகளை எல்லாம் ஒன்...