Shadow

Tag: துஷாரா

ராயன் விமர்சனம்

ராயன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
D50 எனும் தனது ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இது இயக்குநராக அவருக்கு இரண்டாம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. காத்தவராயன், முத்துவேல்ராயன், மாணிக்கவேல்ராயன் என ராயன் சகோதரர்கள் மூவர். அவர்களுக்கு துர்கா எனும் தங்கை பிறக்கிறாள். அவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே, அவளைத் தூக்கிக் கொண்டு ராயன் சகோதரர்கள் சென்னை வந்துவிடுகின்றனர். வளர்ந்ததும், குடிகாரரான முத்துவேல்ராயனால் ஒரு பெரும்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அதை ஒன்றாகச் சேர்ந்து எதிர்கொள்ளும் ராயன் சகோதரர்கள், ஒரு கட்டத்தில், கதையில் எதிர்பாராத திருப்பமும், அதிர்ச்சி மதிப்பீடும் வேண்டுமெனக் கருதி தொலைந்து போகிறார்கள். படம் தொடங்கி இடைவேளை வரை நறுக்கு தெறித்தாற்போல் உள்ளது. ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருக்கும் ராயன் சகோதரர்களின் வாழ்க்கை, அந்த வாழ்விடம், முத்துவேல்ராயனுக்கும் மேகலாவுக்கும் இடையேயான காதல் என முதற்பாதி கச்சித...
நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதல், நெருக்கம், பாலினப்பண்பு முதலியவற்றை மையமாகக் கொண்டு ஓவியம் தீட்டுவதில் வல்லவரான 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆஸ்திரிய ஓவியர் குஸ்தாவ் க்ளிம்ட் (Gustav Glimt) -இன் மிகவும் புகழ்பெற்ற ஓவியமான The Kiss இலிருந்து படத்தின் ஃப்ரேம் தொடங்குகிறது. படத்தின் மையமும், காதல், நெருக்கம், பாலினப்பண்பு ஆகியவற்றைச் சுற்றியே! இனியனின் அறைச்சுவரில், 'தி கிஸ்' ஓவியமும், பின்னணியில், கறுப்பினப் பெண்மணியான நினா சிமோனின் (Nina Simone) பாடலும் ஒலிக்கிறது. பாடகியும், இசையமைப்பாளருமான நினா சிமோன் ஒரு சமூகச் செயற்பாட்டாளரும் கூட! அதாவது, இனியன் என்பவர் நவீனத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்ட முற்போக்காளன் என்றறியலாம். தனது இசையின் மூலமாகவும், பிரபல்யத்தின் மூலமாகவும், சமூக உரிமைகளுக்காகப் போராடிய நினா சிமோனோடு ஒப்பிட்டு, இளையராஜாவின் அரசியல் நிலைப்பாட்டின் மீது விமர்சனம் உள்ளவன் இனியன். அவனது காதலியான ரெனே, இனிய...
போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கல்யாணத்திற்கு முன் தினம், நாயகனுக்குப் போதை ஏறி, அவன் புத்தி மாறுவதால், என்னென்ன விளைவுகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டு விபரீதமாகிவிடுவதுதான் படத்தின் மையக்கரு. உண்மையில், போதை தேடும் நபர்கள் எல்லாம் ஸ்டெடியாக இருக்க, மணப்பெண்ணான ஜனனியிடம் சும்மா விளையாட நினைக்கும் கார்த்திக்கின் வாழ்க்கை தலைகீழாய்ப் புரள்கிறது. சமீபத்திய ஸ்பைடர்-மேன் படத்தில், தொழில்நுட்பம் கொண்டு வில்லன் உருவாக்கும் மாய உலகத்தை, போதைப் பொடியை மூக்கினுள் இழுத்துக் கொண்டு உருவாக்கிக் கொள்கிறான் கார்த்திக். அவன் புத்தி எப்படி எல்லாம் மாறுகிறது என படம் பேசுகிறது. நல்ல த்ரில்லர் படமாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால், மெஸ்சேஜும் வேண்டுமென்ற இயக்குநர் K.R.சந்துருவின் உளக்கிடக்கை, அதற்கு எமனாகிவிட்டது. தலைப்பிலேயே அவரது விருப்பத்தைப் பட்டவர்த்தனமாய் உணர்த்திவிடுகிறார். போதை ஏறினால் புத்தி மாறிவிடும் எ...
போதை ஏறி புத்தி மாறி – நாயகி துஷாரா

போதை ஏறி புத்தி மாறி – நாயகி துஷாரா

சினிமா, திரைத் துளி
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள போதை ஏறி புத்தி மாறி படத்தை சந்துரு கே.ஆர் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 12ஆம் தேதி உலகளவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தீரஜ், ப்ரதாயினி மற்றும் துஷாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள, இந்தப் படத்தில் ராதாரவி, சார்லி, அஜய் மற்றும் இன்னும் சில நடிகர்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் காட்சி ரீதியாகப் படத்துக்குப் பக்கபலமாக இருக்க, கே.பி. இசையமைத்திருக்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். கதிர் நடராசன் திரைக்கதை எழுதியுள்ளார். “ஆரம்பத்தில், இயக்குநர் சந்துரு சார் என்னை அழைத்து, இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டார். படத்தின் முழுக் கதையைப் பற்றிக் கூட நாங்கள் பெரிதாக உரையாடவில்லை. பின், இந்தப் படத்தைப் பற்றி மிக நீண்ட காலமாக அவரது தரப்பில் இருந்து எனக்கு எந்தத் தகவலும் ...