புறம்போக்கு என்கிற பொதுவுடமை விமர்சனம்
ஆறாண்டுகளுக்கு பிறகு வந்துள்ள எஸ்.பி.ஜனநாதனின் படம். அந்த எதிர்பார்ப்பைத் துளியும் ஏமாற்றாமல் அசத்தியுள்ளார். மக்கள் விடுதலைக்காகப் போராடி இறந்த அனைத்து தோழர்களுக்கும் இப்படத்தைச் சமர்ப்பிக்கிறார்.
பாலுச்சாமி எனும் கம்யூனிஸ்ட்க்கு, தேசத் துரோகக் குற்றத்துக்காக மூன்று தூக்கு தண்டனையை அறிவிக்கிறது இந்திய அரசு. தூக்கு தண்டனையை நிறைவேற்ற, சிறை அதிகாரியான ஏ.டி.ஜி.பி. மெக்காலே ஐ.பி.எஸ். வசம் ஒப்படைக்கப்படுகிறார் பாலுச்சாமி. தீர்ப்பின்படிபாலுச்சாமியைத் தூக்கிலிட, எமலிங்கம் எனும் ஹேங்மேனின் உதவி தேவைப்படுகிறது. எமலிங்கத்தின் உதவி கிடைத்ததா? பாலுச்சாமிக்கு தண்டனையை மெக்காலே நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் கதை.
விறைப்பான காவல்துறை அதிகாரி மெக்காலேவாக ஷாம். மிகப் பொலிவாய், கம்பீரமாய் உள்ளார். சிறைக்குள் எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டுமென உறுதியாக இருக்கும் நேர்மையான காவல்துறை அதிகாரி. தூக்கு தண்...