
தூங்கா வனத்தின் க்ளிட்ச் மியூஸிக்
“உத்தமவில்லன், பாபநாசம் என மியூஸிக் பண்ணி, அந்த ஹேங் ஓவரில் இருந்து வெளிவராமல் இருந்தேன். தூங்கா வனத்துக்கு எந்த பேட்டர்னில் மியூஸிக் பண்ணலாம்னு ஐடியா போயிட்டே இருந்தது. கமல் க்ளிட்ச் மியூஸிக் பண்ணலாம் என்றார். எனக்கு ஒரு சந்தேகம். க்ளிட்ச்னு ஒருவகை மியூஸிக் இருக்கு. அதைத்தான் சொல்றாரா எனக் கேட்டேன். ஆமாம்ன்னார். ஆனா, அந்த வகை மியூஸிக்கில் ஸ்பீக்கர் கிழிஞ்சாப்ல சத்தம் வரும். சரியா மிக்ஸ் செய்யலைன்னு நினைச்சுட்டா என்னப் பண்றதுன்னு டென்ஷனா கேட்டேன். ‘க்ளிட்ச் மியூஸிக், மெட்டல் மியூஸிக் ஒன்னு இருக்குன்னு நாம ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கலைன்னா வேற யார் சேர்ப்பா?’ என என்னிடம் கேட்டார். இதுல நானொரு பாடம் கத்துக்கிட்டேன். புதுசா ஒன்னு ஆடியன்ஸ்க்கு அறிமுகப்படுத்துவதில் நாம் தயக்கம் காட்டக் கூடாது” என்றார்.
“ஜிப்ரனின் வாய் பேசாது; அவரது வாத்தியங்கள் பேசும்” என ஜிப்ரானைப் புகழ்ந்த வைரமுத்து, “ஒருநாள...