Tag: தேசிங் பெரியசாமி
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்
இடைவேளையின் பொழுது ஓர் எதிர்பாராத ட்விஸ்ட், படத்தின் முடிவில் புன்னகையை வரவைக்கும் ஒரு ட்விஸ்ட் என படம் ஸ்வீட் சர்ப்ரைஸாய் வந்துள்ளது.
படத்தின் தலைப்பைக் கொண்டே இது ஓர் அழகான காதல் படமென யூகிக்கலாம். அப்படிக் காதல் படமாக மட்டும் தேங்கிவிடாமல், ஆன்லைன் குற்றத்தையும், டெக்னிக்கல் குற்றத்தையும், அவற்றை நூல் பிடித்துத் தொடரும் காவல்துறையின் சாமர்த்தியத்தையும் அழகாகக் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் தேசிங் பெரியசாமி.
துல்கர் சல்மானும், ரிது வர்மாவும் ஒரு காதல் ஜோடி என்றால் விஜய் டிவி புகழ் ரக்ஷனும், நிரஞ்சனி அகத்தியனும் ஒரு காதல் ஜோடியாக வருகின்றனர். படத்தை மைய இணைக்கு நிகரான ஒரு ஜோடியாகக் கலக்கியுள்ளனர். சொப்பு பொம்மை போலிருக்கும் சன்னி (Sunny) வகை ஸ்கூட்டரைக் காட்டி நாயகியை அறிமுகப்படுத்த, நிரஞ்சனி அகத்தியனை தண்டர்பேர்ட் புல்லட்டில் அறிமுகப்படுத்துகின்றனர். அவரது அலட்சியம் கலந்த பார்வையு...