Shadow

Tag: தேஜா சஜ்ஜா

தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டன்நேனியின் புதிய படத்தலைப்பு தொடர்பான அறிவிப்பு

தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டன்நேனியின் புதிய படத்தலைப்பு தொடர்பான அறிவிப்பு

சினிமா, திரைச் செய்தி
சமீபத்தில் வெளியான ஹனுமன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனியுடன் இணையும் புதிய படத்தினை டோலிவுட்டின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி “புரடக்சன் நம்பர் 36”, ஆக பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. தயாரிப்பாளர் டிஜி விஸ்வ பிரசாத் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவிப்பு போஸ்டரில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா முகத்தில் தீவிரமான முக பாவனையுடன் மிடுக்காக தோற்றமளிக்கிறார். அவரது முந்தைய படத்தில் பாரம்பரிய தோற்றத்தில் காட்சியளித்த தேஜா சஜ்ஜா முற்றிலும் புதிய ஸ்டைலான தோற்றத்திற்கு மாறி சூப்பர் யோதாவாக அசத்துகிறார். இப்படத்தின் தலைப்பு ஏப்ரல் 18ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.ஈகிள் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கார்த்திக் கட்டம்நேனி மற்றும...
ஹனுமான் விமர்சனம்

ஹனுமான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிறப்பிலிருந்தே தான் ஒரு சூப்பர் ஹீரோவாக ஆக வேண்டும் என்று வெறி கொண்டு அலையும் ஒரு கதாபாத்திரம்.  பிறப்பிலிருந்தே எந்தவொரு நோக்கமும் இன்றி தான் தோன்றித்தனமாக அலைந்து திரியும் மற்றொரு கதாபாத்திரத்திற்கு எதிர்பாராத விதமாக சூப்பர் ஹீரோவின் சக்தி கிடைக்கிறது.  இந்த இரு நேரெதிர் கதாபாத்திரமும் அந்த சக்திக்காக மோதிக்கொள்ளும் மோதலே இந்த “ஹனுமான்” திரைப்படம்.இந்திய மொழித் திரைப்படங்களும் இந்த இருபதாம் நூற்றாண்டில் சிஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரமிப்பூட்டும் காட்சிகளை படைக்கத் துவங்கி இருக்கும் இந்த நேரத்திலும், அயோத்தியில் ராமர் கோவில் திறக்க இருக்கும் நேரத்திலும் இந்த ‘ஹனுமான்’ திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. பாகுபலி தொடங்கி ஆதிபுருஷ் திரைப்படம் வரை சிஜி தொழில்நுட்பத்துடனும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்துடனும் கற்பனையான காட்சிகளை திரைக்கு கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை ...
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படமாக ”ஹனு-மான்” இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படமாக ”ஹனு-மான்” இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

சினிமா, திரைச் செய்தி
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான்.இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் "அஞ்சனாத்ரி" என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.இந்நிகழ்வினில்தயாரிப்பாளர் சைத்தன்யா பேசியதாவது… எல்லோருக்கும் அட்வான்ஸ் பொங்க...
பிரசாந்த வர்மா, தேஜா சஜ்ஜாவின் கூட்டணியில் உருவாகிய “ஹனுமான்”  டிரைலர் வெளியீடு

பிரசாந்த வர்மா, தேஜா சஜ்ஜாவின் கூட்டணியில் உருவாகிய “ஹனுமான்” டிரைலர் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
நமது அசல் நாயகன் ஹனுமானின் வீரதீரத்தைக் காண்பதற்காக புனிதமாக காத்திருந்தமைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம்..! இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான 'ஹனுமான்' திரைப்படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது.அகண்ட பாரதத்தின் இதிகாசத்திலிருந்து ஈர்க்கப்பட்டு இந்த முன்னோட்டத்தின் முதல் காட்சி- அஞ்சனாத்திரி இடம் பெற்றிருப்பது, நம்மை கற்பனை பிரபஞ்சத்திற்குள் அழைத்துச் செல்கிறது. தண்ணீருக்கடியில் நடக்கும் காட்சியில் கதாநாயகன் ஒரு நட்சத்திரம் போல் ஜொலிக்கும் முத்து ஓட்டின் அருகில் செல்வதை காட்சிப்படுத்துகிறது. 'யதோ தர்ம ததோ ஹனுமா.. யதோ ஹனுமா ததோ ஜெய..' (எங்கே நீதி இருக்கிறதோ. . அங்கே ஹனுமான்... ஹனுமான் எங்கே இருக...
தேஜா சஜ்ஜாவின் ஹனுமான் படப்பிடிப்பு முடிந்தது

தேஜா சஜ்ஜாவின் ஹனுமான் படப்பிடிப்பு முடிந்தது

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் 'ஹனுமான்' படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்புத் தளத்தின் காணொளியைப் படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய 130 நாட்களாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்காகவும், படத்தின் தரத்திற்காகவும் கடுமையாக உழைத்து வருகிறார். இப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பையும் பெற்றது. அனுமன் ஜெயந்தி தினத்தன்று வெளியிடப்பட்ட ...
ஹனுமான் டீசர் – 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள்

ஹனுமான் டீசர் – 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்தியத் திரைப்படமான ' ஹனு-மான்' படத்தின் டீசர் வெளியாகி பெரும் சாதனையைப் படைத்திருக்கிறது. இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் தமிழ் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது.‌ படத்தின் டீசர், தேசம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. டீசரில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியும் வசீகரத்துடன் இருந்தது. டீசரில் ஹனுமானின் அறிமுகம் அனைவரையும் கவர்ந்தது. இதற்காக இயக்குநர் பிரசாத் வர்மாவிற்கு பிரத்தியேகமான பாராட்டுகள் குவிந்து வருகிறது. இளம் நட்சத்திரமான தேஜா சஜ்ஜா சூப்பர் ஹீரோவாக அவருடைய தோற்றத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார். இதனிடையே ஹனுமான் படத்தின் டீசர் வெளியான குறுகிய காலக்கட்டத்தில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கி...
அயோத்தியில் ஸ்ரீராமரின் ஆசி பெற்ற ஹனுமான் படக்குழு

அயோத்தியில் ஸ்ரீராமரின் ஆசி பெற்ற ஹனுமான் படக்குழு

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
விரைவில் வெளியாகவிருக்கும் 'ஹனுமான்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வெற்றி பெற்று வருவதால் உற்சாகமடைந்த இயக்குநர், நாயகன் உள்ளிட்ட படக் குழுவினர், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்தனர்.படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் அசல் இந்திய சூப்பர் ஹீரோ படைப்பு ஹனுமான். இதில் நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தயாராகி வெளியாகவிருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் இது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.ஹனுமான் படத்தின் டீசருக்குக் கிடைத்த ஆதரவால் மனம் மகிழ்ந்த படக்குழுவினர், ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்திற்குச் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனையில் படக்குழுவினர் ஈடுபட்டனர். இவர்களின் இந்த ஆன்மிகப்...
ஹனுமான் – சர்வதேச சூப்பர் ஹீரோ

ஹனுமான் – சர்வதேச சூப்பர் ஹீரோ

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைச் செய்தி
பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு, அப்படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜாவுடன், பிரசாந்த் வர்மா இணைந்திருக்கும் இரண்டாவது படம் 'ஹனுமான்'. அமிர்தா ஐயர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார்.ஹனுமான் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட நாயகன் தேஜா சஜ்ஜா, ''அனுமனின் சிறிய மந்திரத்தைப் பாடிவிட்டுப் பேசத் தொடங்குகிறேன். ''மனோஜவம் மருததுல்யவேகம், ஜிதேந்திரியம் புத்தி மதம் வரிஷ்டம், வதத்மஜம் வானராயுத முக்யம், ஸ்ரீ ராமதூதம் சிரஸ நாமானி'.அனுமனை விட பெரிய சூப்பர் ஹீரோ நம்மிடம் இருக்கிறாரா? இந்த ஸ்லோகத்தின் பொருள் என்னவெனில், 'மனம் மற்றும் காற்றைப் போல வேகமானவர். புலன்களின் தலைவன். சிறந்த ஞானம், கற்றல் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றால் குறிப...
ஹனுமான் – பனி லிங்கத்திற்குள் தவம்

ஹனுமான் – பனி லிங்கத்திற்குள் தவம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
இளம் நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹனு-மான்' படத்தில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 'ஜோம்பி ரெட்டி' எனும் திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், திறமையான இளம் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் 'ஹனு-மான்' எனும் பான் இந்திய அளவிலான சூப்பர் ஹீரோ திரைப்படம் தயாராகியிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா அண்மையில் வெளியிட்ட 'ஹனுமான்' படத்தின் காட்சித் துணுக்குகளில் நாயகன் தேஜா சஜ்ஜாவின் கதாபாத்திரத்தைப் பிரத்தியேக பார்வை மூலம் அறிமுகப்படுத்தியிருந்தார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசர், பார்வையாளர்கள் தங்களின் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திராத வகையில் அமைந்திருக்கிறது. நீர்வீழ்ச்சியின் மாறுபட்ட கோணத்தில் தொடங்கும் டீசரின் பின்னணியில், ஹனுமான் என்ற புராண கதாபாத்திர...
ஹனு-மான் தேஜா சஜ்ஜா

ஹனு-மான் தேஜா சஜ்ஜா

இது புதிது
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹனு-மேன்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண செளரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சூப்பர் ஹீரோ ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி பிரம்மாண்டமான பொருட்செடவில் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருக்கிறது. இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்...