ரீவைண்ட் – தேஜ் இயக்கி நடிக்கும் த்ரில்லர் படம்
கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான ‘காதலுக்கு மரணமில்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான தேஜ், தொடர்ந்து ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் ‘மொழிவது யாதெனில்’, ‘விண்ணை தொடு’
ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
தற்போது நடிப்புடன் இயக்கத்திலும் கவனம் செலுத்தும் தேஜ், குடும்ப த்ரில்லர் ஜானரில் ஒரு படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கிறார்.
‘ரீவைண்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் உருவாகிறது. பனரோமிக் ஸ்டுடியோ (Panaromic Studio) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தேஜுக்கு ஜோடியாக சந்தனா ராகவேந்திரா நடிக்கிறார். இவர்களுடன் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் நடிப்பதோடு, இயக்குநர் கே.பாலச்சந்தர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட பழம்பெரும் நட...