எமோஜி விமர்சனம்
ஆஹாவில், மஹத் ராகவேந்திரா, தீபிகா சதீஷ், மானஸா செளத்ரி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்த இணைய தொடர் வெளியாகியுள்ளது. எமோஷ்னலான காதல் கதை என்பதால் 'எமோஜி' எனத் தலைப்பிட்டுள்ளனர்.
எமோஷன்ஸை (உணர்ச்சிகள்) வரைபடங்களாகச் சித்தரிக்கப்படுவதை எமோட்டிகான் என்றோ, எமோஜி என்றோ அழைப்பார்கள். எமோஜி என்பது இரண்டு ஜப்பானிய சொற்களின் (E + moji) சேர்க்கையில் உருவான வார்த்தை.
பிரார்த்தனா எனும் பெண்ணைக் காதலித்து, தீக்ஷாவைக் கல்யாணம் செய்யும் ஆதவ், விவாகரத்திற்கு விண்ணப்பிக்கிறான். பிரார்த்தனாவுடன் எப்படி காதல் மலர்கிறது, ஏன் தீக்ஷாவைக் கல்யாணம் செய்கிறான், மகிழ்ச்சியாக வாழும்போதே ஏன் விவாகரத்துச் செய்கிறான் என்பதே இத்தொடரின் கதை.
நாயகனின் நண்பனாக VJ ஆஷிக் நடித்துள்ளார். நடப்பனவற்றை எல்லாம் ராப் பாடல்களாக மாற்றும் ராப்பராக நிறைய பாடுகிறார். சனத் பரத்வாஜின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. பின்...