Shadow

Tag: தேவி ஸ்ரீ பிரசாத்

சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

Songs, அயல் சினிமா, இது புதிது, காணொளிகள், சினிமா
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே.எஸ்.ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'வால்டேர் வீரய்யா' படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.‌ வெகுஜன மக்களுக்கான திரைப்படம் என்பதால் இயக்குநர் பாபி கொல்லி, கூடுதல் கவனத்துடன் படைப்பை உருவாக்கி வருகிறார். இதுவரை யாரும் திரையில் கண்டிராத வகையில் தனது தேவதையைக...
“ஓ பெண்ணே” – தேவி ஸ்ரீ பிரசாதின் சுயாதீன பாடல்

“ஓ பெண்ணே” – தேவி ஸ்ரீ பிரசாதின் சுயாதீன பாடல்

இது புதிது
T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் "ஓ பெண்ணே" பாடல் வெளியீட்டு விழா அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார். இந்தப் பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ்ப் பதிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். இந்தப் பாடலின் ஹிந்திப் பதிப்பை ரன்வீர் சிங் முன்னரே வெளியிட்டு இருந்தார். இந்தப் பாடலின் தெலுங்கு பதிப்பு திரு. நாகார்ஜூனாவால் வெளியாக இருக்கிறது. வெளியீட்டு விழாவினில் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், “கமல் சாருக்கு எனது அன்புகளும் நன்றிகளும். நான் எந்த பணியை மேற்கொண்டாலும் அவர் எனக்கு உறுதுணையாகவும், உத்வேகம் கொடுக்கக் கூடியவராக எப்போதும் இருக்கிறார். இந்த சர்வதேச பாடலுக்கான ஐடியாவை முதன் முதலில் அவரிடம் ...
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகள் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகள் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி, பக்திப் பாடல்களைப் பாடி நம் கண் முன்னே இறைவனைக் கொண்டு வந்து நிறுத்திய தெய்வீகக் குரலுக்குச் சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தைப் பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது. திருமாலின் புகழைப் பாடும் 'வெங்கடேச சுப்ரபாதம்' திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி, 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார். இத்தகைய சிறப்புமிக்க வெங்கடேச சுப்ரபாதத்தை இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்லும் நோக்கில், டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் புதிய அத்தியாயத்தைத் தொட்டுள்ளது. ஏற்கெனவே கந்த சஷ்டி கவசத்தை சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா குரலில் வெளியிட்டு 12 மில்...
ஜெய் பஜ்ரங்பலி: தேவிஸ்ரீ பிரசாதின் அனுமன் சாலிசா

ஜெய் பஜ்ரங்பலி: தேவிஸ்ரீ பிரசாதின் அனுமன் சாலிசா

ஆன்‌மிகம், சினிமா
உலகப் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதையான பத்மஸ்ரீ மேண்டலின் U.ஸ்ரீனிவாசனின் 50-வது பிறந்த நாள் (ஃபிப்ரவரி 28) நினைவாக அவரது சிஷ்யனும் பிரபல இசையமைப்பாளருமான தேவி ஸ்ரீ பிரசாத் தனது குருவிற்குப் பிடித்த கடவுளான அனுமனைப் போற்றும் அனுமன் சாலிசா பாடலை ஃப்யூஷனாக உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலுக்கு ஜெய் பஜ்ரங்பலி எனவும் பெயரிட்டுள்ளார். இந்தப் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து இந்தியாவின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகரான ஷங்கர் மகாதேவன் அவர்களும் பாடியுள்ளார். மேலும் கிராமி விருது பெற்ற பத்ம பூஷன் விக்கு விநாயகரம், ட்ரம்ஸ் சிவமணி, கஞ்சிரா செல்வ கணேஷ், மேண்டலின் U.ஸ்ரீனிவாசன் அவர்களின் சகோதரரான பிரபல மேண்டலின் கலைஞர் U.ராஜேஷ் ஆகியோரும் இந்தப் பாடலுக்காக ஒன்றிணைந்து பணி புரிந்துள்ளனர். இந்தப் பாடலை, ஃபிப்ரவரி 28 அன்று மாலை, சென்னையில் உள்ள மியூசிக் அகாடெமியில் நடைபற்ற 'தி கிரேட் மேண்டலின் ஷோ (T...
புது மெட்ரோ ரயிலு – கீர்த்தி சுரேஷ்

புது மெட்ரோ ரயிலு – கீர்த்தி சுரேஷ்

சினிமா, திரைச் செய்தி
‘சாமி ஸ்கொயர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “இந்தப் படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நான் நடித்திருக்கிறேன். சாமி படத்தில் அவரின் நடிப்பில் ஏற்படுத்திய பிரமிப்பு என்னால் ஏற்படுத்த முடியுமா என்றால் முடியாது. ஆனால் என்னுடைய ஸ்டைலில் முயற்சித்திருக்கிறேன். முதலில் நான் இதனை ஏற்கத் தயங்கினேன். ஆனால் இயக்குநர் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதனால் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தைப் பார்த்து வியந்து அவரின் ரசிகையாகிவிட்டேன். இந்தப் படத்தில் நடைபெற்ற பல சுவராசியமான சம்பவங்களை படத்தின் வெற்றிவிழாவில் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார். படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இயக்குநர் ஹரியுடன் பணியாற்றும் போது நேரம் குறித்த திட்டமிடல் பற்றி எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பாக...
மகிழ்ச்சி வெள்ளத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்

மகிழ்ச்சி வெள்ளத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்

சினிமா, திரைத் துளி
“தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திரக் கலை விழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்துத் திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்துக் கேட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த போது, அவர்கள் தங்களுடைய மத்தியில் என்னை அமர வைத்துக் கொண்டனர். புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ளும் அற்புதமான வாய்ப்பும் கிடைத்தது. இது என்னுடைய வாழ்நாளில் இது வரை கிடைக்காத சந்தோஷம். அது கிடைத்தபோது பரவசமானேன். இந்த இரண்டு பேருடைய பாராட்டும் ஒ...
வீரம் விமர்சனம்

வீரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தீபாவளிக்கு ஒரு படம், பொங்கலுக்கு ஒரு படமென அடித்து ஆடுகிறார் அஜித். அவரது வெள்ளை-கருப்பு முடி திரையில் தெரிந்ததுமே, திரையரங்கம் அதிர ஆரம்பித்து விடுகிறது. அடிதடிதான் வாழ்க்கை என்றிருக்கும் விநாயகம், அகிம்சாவாதியான நல்லசிவத்தின் மகள் கோப்பெரும்தேவி மீது காதல் வயப்படுகிறார். அடிதடி வாழ்க்கையா அல்லது கோப்பெரும்தேவியா என விநாயகம் முடிவெடுப்பதுதான் படத்தின் கதை. விநாயகமாக அஜித். வெள்ளை தாடி , வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை என திரையில் ஜொலிஜொலிக்கிறார். சும்மா வந்து நின்றாலே விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. எத்தனைபேர் வந்தாலும் அடித்து துவம்சம் பண்ணுகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு, அஜித்தின் குரலையும் தொழில்நுட்ப உதவியால் கம்பீரமாக்கியுள்ளனர். படத்தில் அஜித்திற்கு நான்கு தம்பிகள். தமிழ் சினிமாவின் வழக்கம்போல், அஜித் ஒரு பாசக்கார அண்ணன். பாலா தான் அஜித்தின் பெரிய தம்பி. மலையாளப் பக...