Shadow

Tag: தொட்ரா இசை வெளியீடு

“இந்தப் படம் என் மாமியாரின் கடைசி ஆசை” – ஒரு பெண் தயாரிப்பாளர்

“இந்தப் படம் என் மாமியாரின் கடைசி ஆசை” – ஒரு பெண் தயாரிப்பாளர்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் பாண்டியராஜின் மகன் ப்ரித்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள படம் “தொட்ரா”. ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில், டெக்ஸ்டைல் துறையைச் சேர்ந்த ஜெய்சந்திரா சரவணக்குமார் எனும் பெண்மணி தயாரித்துள்ளார். “ 'என் மகனுக்குத் திரைப்படங்களில் நடிக்க மிகவும் ஆசை. அவனை ஒரு படத்திலாவது நடிக்க வைத்துவிடு' என்றார் என் மாமியார். அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாகவும் எனது கணவரை நடிகராகப் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் தான் தயாரிப்பாளராக மாறினேன். என் வாழ்க்கையில் இதுவரை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே நான் பார்த்துள்ளேன். இயக்குநர் மதுராஜ் சொன்ன கதை என்னைக் கவர்ந்துவிட்டது. அதற்காக எடுத்ததுமே என் கணவரை ஹீரோவாகப் பார்க்க என்னால் முடியவில்லை. ஹீரோவாக அவருக்குச் செட்டாகுமா எனத் தீர்மானிக்க முடியவில்லை. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் அவருக்கான வரவேற்பு கிடைத்தால், அடு...
“சீனியர் எனக்கில்லாத ஃபீலிங்கா?” – பாக்கியராஜ்

“சீனியர் எனக்கில்லாத ஃபீலிங்கா?” – பாக்கியராஜ்

சினிமா, திரைச் செய்தி
ஆணவக்கொலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் "தொட்ரா". இயக்குநர் பாக்கியராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி நாயகனாக நடித்துள்ளார்.  அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாண்டியராஜன், “ப்ரித்வி இவ்வளவு நண்பர்களைச் சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியைப் பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார். நிகழ்ச்ச...