Shadow

Tag: தொப்பி

தொப்பி விமர்சனம்

தொப்பி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குற்றப் பரம்பரையைச் சேர்ந்த பட்டியல் இனத்தவனான சித்தன், தனது லட்சியமான காவல் துறையில் சேருகிறானா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் கதை. படத்தின் தலைப்பு போடும்பொழுதே, பொம்மலாட்ட பாணியில் குற்றப்பரம்பரை எப்படி உருவாகின என்ற செய்தியைச் சொல்லி விடுகிறார் இயக்குநர் யுரேகா. படத்தின் பலம் அதன் இயல்பான கதாபாத்திரங்கள். படத்தின் முதற்பாதி மிகவும் கலகலப்பாகப் பயணிக்கிறது. மலைவாசிகளின் தலைவராக வரும் G.M.குமார் அதகளம் செய்துள்ளார். திருடச் செல்பவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புதல், ஏ.டி.எம். மெஷினைப் பெயர்த்தெடுப்பது, பேயோட்டுவது, பேயைக் கொண்டு போலிஸை ஓட்டுவது என G.M.குமார் படத்தின் கலகலப்பிற்குப் பொறுப்பேற்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் அருள்தாஸும் பிரமாதப்படுத்தியுள்ளார். பில்லி சூனியத்திற்குப் பயப்படுவது, சித்தனின் வளர்ச்சியைக் கண்டு பொறுமுவது, உறவாடிக் கெடுக்கும் நைச்சியத்துடன் நடந்து கொள்வ...
யுரேகாவின் தொப்பி

யுரேகாவின் தொப்பி

சினிமா, திரைச் செய்தி
மதுரை சம்பவம் எடுத்த இயக்குநரின் மூன்றாவது படம் தொப்பி. படத்தில் நாயகனாக முரளிராம் அறிமுகமாகிறார்; நாயகியாக மலையாள வரவான ரக்ஷா நடிக்கிறார்.  நியூசிலாந்தில் 25 வருடங்களாக ஹோட்டல் நடத்தி வரும் நாமக்கலைச் சேர்ந்த பரமராஜ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவர் பாக்கியராஜ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர். தனது சினிமா எடுக்கும் கனவை நனவாக்கியதோடு, தனது அபிமான நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜையே தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க வைத்திருந்தார். அதே போல், படத்தின் இசையமைப்பாளரான ராம்பிரசாத் சுந்தரு, வெளிநாட்டில் வாழ்பவரே! அமெரிக்க வாழ்த் தமிழரின் இசையில், பாடல்கள் நேட்டிவிட்டி (Nativity) இசையுடன் ஒலிக்கிறது என்பதை விட, வைரமுத்துவின் பாடல் வரிகளைக் கேட்க முடிகிறது என்பது கூடுதல் விசேஷம்.  Denotified criminals என குற்றப் பரம்பரையில் சேர்க்கப்பட்டவர்களைப் பற்றி கள ஆய்வு செய்தே திரைக்கதை அம...