
கும்பகோணம் குணா
வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் பெண் தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் படம் ‘கதிர்’. தோழர் அரங்கன் இயக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
கும்பகோணத்தில் பஸ் ஸ்டாண்ட் குணா என்பவர் அனைவருக்கும் தெரிந்தவராக நிஜத்தில் வாழ்ந்தவர். குணாவாக கிஷோர் நடிக்கிறார். இவரை எதிர்த்து மோதும் சங்கிலி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில், 8 முறை குங் ஃபூ-வில் பிளாக் பெல்ட் வாங்கிய மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடிக்கிறார். கிஷோர் - மாஸ்டர் ராஜநாயகம் மோதும் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட்க்கு நிகராக எடுக்கப்பட்டு வருகிறது.
புதுமுகங்கள் விஷ்வா கதாநாயகனாகவும், நீரஜா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் கஞ்சா கருப்பு, ’கோலி சோடா’ பாண்டி, சுப்புராஜ், ‘பசங்க’ சிவகுமார், செந்தி, சிந்து, பருத்திவீரன் சுஜாதா, புதுமுகம் சங்கவி ஆகியோர் நடிக்கிறார்கள்.
சேரன் பாண்டியன், சிந்துநதி பூ உள்ளிட்ட...