Shadow

Tag: த்ரிஷா இல்லனா நயன்தாரா

36 முத்தங்களின் பின்னணி.!

36 முத்தங்களின் பின்னணி.!

சினிமா, திரைத் துளி
டீஸர் வெளியான பின், ஒரே ஒரு முத்தக் காட்சிக்கு 36 டேக்குகள் வாங்கினாராம் ஜி.வி.பிரகாஷ் குமார் எனச் சொல்லப்பட்டது. “டீஸரைப் பார்த்துட்டு அனைவரும் கேட்டது, ‘ஏன் ஒரு நல்ல பையனை இப்படியாக்கி வச்சிருக்கீங்க?’ என்பதுதான். நான் ஒன்னும் செய்யலை. அவரது இயல்பே அப்படித்தான். வெளில யாருக்கும் அது தெரில. சொன்னாலும் நம்ப மாட்டேங்கிறாங்க. இப்ப இருக்கிற லவ்வுன்னா என்ன? அதை எந்தக் கட்டுப்பாடும் இல்லாம தனது ஃப்ரீ ஜோனில் இருந்து நடிச்சிருக்கார் ஜி.வி. இது முழுக்க முழுக்க பசங்களுக்கான படம். ஒவ்வொரு பொண்ணும், பையனும் படத்தோட தன்னைப் பொருத்திப் பார்த்துப்பாங்க. படத்தின் முதல் பாதி எழுதி முடிச்சதுமே, இவர்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணிக் கேட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, அப்போ பென்சில் டார்லிங் படம்லாம் ஸ்டார்ட் பணவே இல்லை. ‘என்னடா சொல்றா நீ?’ன்னு கேட்டார். அப்புறம் அவரது டார்லிங் படமும் ரிலீஸ் ஆகிடுச்சு...
கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி

கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி

சினிமா, திரைத் துளி
“த்ரிஷா இல்லனா நயன்தாரா – இந்த காலகட்டத்துக்கான லவ் படம். இன்னும் சரியா சொல்லணும்னா, கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி இது. இந்தப் படத்தின் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரம் தன் சொந்த வாழ்க்கையில் பண்ண லவ், காதல் கேட்ட லவ்வெல்லாம் வச்சு கற்பனை கலந்து கதையாக்கியிருக்கார். இப்பயிருக்கிற யூத் ஆடியன்ஸுக்குப் பிடிக்கிறாப்ல படம் எடுத்திருக்கார்” என்றார் படத்தைத் தயாரித்த கேமியோ பிலிம்ஸ் C.J.ஜெயகுமார். படத்தை வழங்கும் ஸ்டுடியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா, “படம் தர லோக்கல்! இதுக்குன்னு இருக்கிற ஆடியன்ஸ்க்கு படம் வந்து நாளாச்சு” என ஜி.வி.பிரகாஷின் படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் திறமையைப் பாராட்டினார். “ஜி.வி.க்கு எந்த கதாப்பாத்திரமாவும் மாறி நடிக்கிற திறமை இருக்கு. நல்ல டைமிங் சென்ஸ் இருக்கு. ம்யூஸிக் போலவே நடிப்பிலும் கலக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக ஹிட். ஏன்னா.. அரை டஜன் படம் பண்றோம்; அதுல நமக்கே தெ...
நனவான மாபெரும் கனவு

நனவான மாபெரும் கனவு

சினிமா, திரைத் துளி
“பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சினிமா பார்க்கக் கூடாது என்று அதட்டுவார்கள். எனக்கு சினிமாவை உணர வைத்தவரே எங்கப்பாதான்” என்றார் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரன். இதிலென்ன என்ன விசேஷம் என்றால், ஆதிக்கின் தந்தையான ரவி கந்தசாமி, தனது மகனிடம் உதவி இயக்குநராக இப்படத்தில் பணி புரிவதுதான். “பாரதிராஜா சார், செல்வமணி சார் இப்படி பல பேர்கிட்ட 16 வருடங்களாக உதவி இயக்குநராக பணி புரிந்து வருகிறார். அப்பாவின் போராட்டத்தையோ அவருடைய அங்கீகாரம் தடைப்படும் போதும் எனக்குள்ள ஜெயிக்கனும் அப்படிங்கற வெறி வரும். நானே என்னோட பாதையைத் தேர்ந்தெடுத்து, ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் கதையைக் கூறி, இன்று என் முதல் படத்தை இயக்கி வருகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறிய அறிமுக இயக்குனர் ஆதிக், “என் அப்பாவும் ஒரு படம் இயக்குவார். தேவைப்பட்டால் நான் அவருக்க...