Shadow

Tag: நகைச்சுவை

கூஸ்பம்ப்ஸ் விமர்சனம்

கூஸ்பம்ப்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கூஸ்பம்ப்ஸ், தமிழில் ‘மயிர்க்கூச்சு’ எனச் சொல்லலாம். மயிர்க்கூச்சு என்றால் பயத்தினாலோ, குளிரினாலோ உடலிலுள்ள முடிகள் குத்திட்டு நிற்கும் நிலை. ஜக்காரி ஒரு புத்தகத்தைத் தெரியாத்தனமாகத் திறந்து விடுவதால், அதிலிருந்து எட்டி எனும் பனி மனிதன் வெளியில் வந்துவிடுகிறான். அதனைத் தொடர்ந்து நடக்கும் மயிர்க்கூச்செறிய வைக்கும் சம்பவங்களே படத்தின் கதை. ஸ்லாப்பி எனும் வில்லன் பொம்மை உயிர் பெற்றதும் படம் சுவாரசியமாகிவிடுகிறது. அது, அனைத்துப் புத்தகங்களிலுமுள்ள கோரமான/ பயங்கரமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதோடு, அவர்களை வழி நடத்தவும் செய்கிறது. மேடிஸன் எனும் ஊரின் தகவல் தொடர்பை முற்றிலும் துண்டித்து. அங்குள்ளவர்களைத் தனிமைப்படுத்தி விடுகிறது ஸ்லாப்பி. ஆர்.எல்.ஸ்டைன் எனும் அமெரிக்க எழுத்தாளர், 1992 இல் இருந்து 1997 வரையிலும், ‘கூஸ்பம்ப்ஸ்’ என்ற தலைப்பில் எழுதிய சிறுவர் திகில் கதைகளைத் தழுவி எடுக்கப்ப...